முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு யாரும் என்னை நிர்பந்திக்கவில்லை: எடியூரப்பா பரபரப்பு பேட்டி

திங்கட்கிழமை, 26 ஜூலை 2021      அரசியல்
Image Unavailable

கர்நாடக பாஜகவிற்குள் உட்கட்சி மோதல் அதிகரித்து வந்த நிலையில், முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். எடியூரப்பா அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழாவான நேற்று, தான் ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பா.ஜ.க. மேலிடத்திற்கு உறுதி அளித்ததன் படி இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி வகித்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன். முதல்வர் பதவியிலிருந்து விலக கட்சி மேலிடம் எந்த நெருக்கடியும் தரவில்லை. நானே முன்வந்து முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினேன்.

கடந்த 2 ஆண்டுகளாக முதல்வராக கர்நாடக மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு நன்றி. உங்கள் ஆசியால் கடந்த 2 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றியுள்ளேன். நான் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு அளித்ததற்கும் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சித் தலைமை மீது எந்த வருத்தமும் இல்லை என்றார்.

மேலும் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 4 முறை கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா ஒரு முறை கூட 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து