முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹில்லாரியுடன் பாக்., வெளியுறவு அமைச்சர் நாளை சந்திப்பு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.20 - அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி ஹர் நாளை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்து பேசுகிறார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா, 4 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் கடைசி நாளான நாளை அந்த நாட்டு வெளியுறவுத்துறை பெண் அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது இரு அமைச்சர்களும் இருநாடுகளிடைய உறவு, பிராந்திய பிரச்சினைகள், தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து விரிவான முறையில் விவாதிக்க உள்ளனர். அமெரிக்க முக்கிய தலைவர்களையும் உயரதிகாரிகளையும் ஹினா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அமெரிக்க பாராளுமன்றத்தின் முக்கிய எம்.பி.க்களையும் ஹினா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்க பாராளுமன்றத்தில் பாகிஸ்தானுக்கு நிதியுதவியை குறைக்கக்கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தர வேண்டாம் என்று ஹினா கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. பெரும் தொழிலதிபர்கள், அறிவு ஜீவிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்கிலும் ஹினா கலந்துகொண்டு பேசுகிறார். ஹில்லாரி கிளிண்டனை சந்திப்பதற்காகவே வாஷிங்டன்னிற்கு ஹர் வந்துள்ளார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலாந்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுடன் இருதரப்பு உறவு உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் முழு அளவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் நுலாந்து தெரிவித்தார். வாஷிங்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நியூயார்க் நகருக்கு ஹினா செல்கிறார். அங்கு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியுடன் ஹினாவும் சேர்ந்து கொள்கிறார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சராக ஹினா பதவி ஏற்றதிலிருந்து ஹில்லாரிக்கும் அவருக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்றும் செய்தி தொடர்பாளர் விக்டோரியா மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago