முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 30 ஆகஸ்ட் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் 477 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 234 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம்,  திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறையூர் மற்றும் உப்பிலியாபுரம் ஒன்றியங்களுக்குட்பட்ட 293 குடியிருப்புகளுக்கு 140 கோடியே 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரைப் பேரூராட்சி மற்றும் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட 50 குடியிருப்புகளுக்கு 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம்,  

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், மதுரை மாநகராட்சியின் புதுமண்டபத்திலிருந்து 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றி அமைக்கப்பட்ட கடைகள், திருமலை நாயக்கர்  மஹாலில் 3 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிரானைட் இருக்கைகள், புல்வெளிப் பரப்பு, கருங்கல் நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புறப் பூங்கா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புராதன வழித்தடத்தில் 14 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்.இ.டி விளக்குகளுடன் கூடிய  அலங்கார விளக்குகள், மாநகராட்சியின் பழைய நகரப் பகுதிகளில் 30 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாற்றியமைக்கப்பட்ட எல்.இ.டி தெரு விளக்குகள், 

சேலம் மாநகராட்சி,  கோட்டை பழைய  மார்க்கெட் சாலையில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம், 8 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு சாலையாக மாற்றியமைக்கப்பட்ட சீத்தாராமன் சாலை,  5 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட கிருஷ்ணா ராஜேந்திர சத்திரம் என மொத்தம் 477  கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற  பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன்,  கே.என்.நேரு, ஆர். காந்தி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து