முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வின் அதிகார அத்துமீறலை சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்: மா.செ. கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சனிக்கிழமை, 3 மே 2025      தமிழகம்
DMK--2025-05-03

சென்னை, “ஜூன் 1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் - சட்டத்தின் துணைக் கொண்டும் தி.மு.க. எதிர்கொள்ளும்” உள்ளிட்ட 4 தீர்மானங்கள் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு: தீர்மானம்: 1 -  சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்குத்தான் உள்ளது என்பதை உணர்த்திய முதல்வருக்கு பாராட்டுக்கள்.  அதுமட்டுமல்லாமல், “சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கே” - “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே - நிச்சயமாக ஆளுநருக்கு இல்லை” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுள்ளார். மேலும், 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வர் துணையாகச் செயலாற்றி வரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் இம்மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வாழ்த்தும் - பாராட்டும் - நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 2 -  தி.மு.க. அரசின் சாதனைகளைப் பகுதி, ஒன்றிய, நகர அளவில், இளைஞர் அணியின் மூலம் வரப்பெற்ற 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 பேச்சாளர்களின் பங்கேற்புடன்,  மொத்தம் 1,244 இடங்களில் “நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு!” சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களை நடத்திடுவதென  முடிவு செய்யப்பட்டுள்ளது.

தீர்மானம்: 3 -  தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூன் 1-ஆம் நாள் கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று இம்மாவட்டச் கழக செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 4  சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற நடுநிலை தவறாது செயல்பட வேண்டிய அமைப்புகளை  அ.தி.மு.க. போன்ற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அமைக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்த அமைப்புகளை ஈடுபடுத்தி வருகிறது.

தி.மு.க..வினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைக்காக அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பா.ஜக அரசு பயன்படுத்துவதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் துணைக் கொண்டு துணிச்சலுடன் எதிர்கொண்டு அதனை எதிர்த்து, நீதியை நிலைநாட்டிடவும் - மக்கள் மன்றத்தில் ஒன்றிய பாஜ. அரசின் அதிகார அத்துமீறலை எடுத்துரைத்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இவ்வாறாக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து