முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் சாதனை படைத்த தினத்தை நினைவுகூர்ந்த ஐ.சி.சி

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன்: யுவராஜ் சிங் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அபார சாதனைப் படைத்த நாளான நேற்று அவர் அடித்த வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது ஐ.சி.சி.

சிறந்த ஆல்ரவுண்டர்...

இந்திய அணி 2007-ம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது. இந்த 2 கோப்பைகளையும் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங். தனது அபார பேட்டிங்காலும், சுழற்பந்து பந்து வீச்சாலும், பீல்டிங்காலும் அசத்தியவர்.

டோனி தலைமையில்...

ஐ.சி.சி. அறிமுகம் செய்த முதல் டி20 உலகக் கோப்பை தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான இளம் இந்திய அணி களம் இறங்கியது.  அக்டோபர் 19-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. 

வேக அரைசதம்...

தற்போது இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் ஸ்டூவர்ட் பிராட், அப்போது இளம் வீரராக இருந்தார். அவர் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு திசைக்கு அனுப்பினார். அதோடு அல்லாமல் 12 பந்தில் அரைசதம் அடித்து, மிக வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

வீடியோ வெளியீடு...

யுவராஜ் சிங்கின் இந்த சாதனையை நினைவு கூறும் வகையில், நேற்றைய தினத்தில் ஐ.சி.சி. தனது டுவிட்டர் பக்கத்தில் சிக்சர்கள் விளாசிய வீடியோவை பதிவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து