எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.28 - முதல்வரின் நல்ல திட்டங்கள் தொகுதி மக்களை சேர வேண்டும் என்பதற்காக முதல்வரை சந்தித்தோம். முதல்வரை சந்திக்க யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று தே.மு.தி.க.- எம்.எல்.ஏ.க்கள் கூறினர்.
தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களான பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருண்பாண்டியன் மற்றும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நேற்று (27.10.2012) தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு, தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி விபரம் வருமாறு:-
செய்தியாளர்கள்: முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதன் நோக்கமென்ன?
அருண்பாண்டியன்: எங்களை தேர்ந்தெடுத்து 1 1ஞூ2 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. பேராவூரணி மக்கள் எங்களுக்கு, எனக்கு இவ்வளவு நல்ல வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு கண்டிப்பாக துரோகம் செய்யக்கூடாது. நிச்சயமாக அவர்களுக்கு ஒரு நல்ல தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காகத்தான் இந்த நடவடிக்கை. முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக பார்த்து எங்களுடைய தொகுதி பிரச்சினையை சொன்னோம். ஒவ்வொரு பிரச்சினையையும் சொன்னோம். எங்க தொகுதியிலே ஒரு அரசு கல்லூரி கூட கிடையாது. அந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது. தொகுதி கிட்டத்தட்ட 2 லட்சத்து 52 ஆயிரம் பேர். அவங்களுடைய பிரச்சினை எனக்கு நல்லாவே தெரியும். ஏனென்றால் அந்த ஊருக்கு அதிகமாக போகல. ஆனா மொத்த தொகுதியையும் டிஜிட்டலைசேஷன் பண்ணிட்டு என்னுடைய கையில் இருக்கு. ஒரு பின்-னிலிருந்து, ஒரு ஊசி நூலிலிருந்து மலை வரைக்கும் எப்படியிருக்குமுனு எனக்கு தெரியும். பிரச்சினைகள் நிறைய இருக்கு. முதல்வர் ஜெயலலிதா பல திட்டங்கள் வைத்துள்ளார். அந்தத் திட்டங்கள் எல்லாம் நேரடியாக எங்கள் தொகுதி மக்களுக்கு போகணும். பேராவூரணி தொகுதியை தவிர வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லை. அதற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை வந்து பார்த்தோம். அவங்க வைத்துள்ள திட்டங்கள் நல்ல நல்ல திட்டங்கள் இவையெல்லாம் மக்களுக்கு வந்து சேரணும். இந்த ஒரே காரணத்திற்காகத்தான் முதல்வர் ஜெயலலிதாவை நேரடியாக வந்து பார்த்து எங்களுடைய மனுவை கொடுத்திருக்கிறோம்.
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி மக்களுக்கு நிறைய கோரிக்கைகள் இருக்கின்றது. ஏற்கனவே சட்டமன்றத்திலே இதுபற்றி நிறைய நான் கோரிக்கைகள் வைத்திருந்தேன். அவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்காக நிறைய திட்டங்கள் அறிவித்து நல்லமுறையில் செயல்படுத்தி வருகின்றார். அதனாலே என்னுடைய தொகுதிக்கும் இது மாதிரி மக்களுக்கு தேவைப்படுகின்ற இந்த திட்டங்களையெல்லாம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறேன். அதைப் பார்த்து கனிவோடு நிறைவேற்றித் தருவேன் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கின்றார். கண்டிப்பாக அவர் எனது தொகுதிக்கு தேவையான கோரிக்கைகளையெல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார் என்று நான் நம்புகிறேன்.
செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 ஆண்டுகளாக உங்களது கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா? அதனால்தான் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தீர்களா?
மைக்கேல் ராயப்பன்: அந்த மாதிரியெல்லாம் முதல்வர் ஜெயலலிதா ஒன்றும் சொல்லவில்லை. கண்டிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்றைக்குத்தான் கோரிக்கைகள் போய் சேர்ந்துள்ளது. கரெக்டா, முதல்வர் ஜெயலலிதா கண்டிப்பாக நிறைவேற்றித் தருவார். அதிகாரிகள் கூட எங்கள் கோரிக்கைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம். அதிகாரிகள் மட்டத்திலிருந்து வராமலும் இருந்திருக்கலாம்.
செய்தியாளர்கள்: முதலமைச்சரை சந்திப்பதற்கு உங்கள் கட்சித் தலைவரிடம் அனுமதி பெற்று வந்தீர்களா?
மைக்கேல் ராயப்பன்: மக்கள் கோரிக்கையை வைப்பதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை என்று நினைத்து முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன்.
செய்தியாளர்கள்: சட்டமன்றத்திலே உங்களுடைய செயல்பாடு எப்படியிருக்கும்?
மைக்கேல் ராயப்பன்: கண்டிப்பாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளை சட்டமன்றத்திலே வைத்து, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்துவோம்.
செய்தியாளர்கள்: உங்களுடைய கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் நேற்று முதலமைச்சரை சந்தித்தார்கள். இன்று நீங்கள் இருவரும் சந்தித்துள்ளீர்கள். உங்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?
மைக்கேல் ராயப்பன்: என்னுடைய தொகுதி கோரிக்கைகளைத்தான் நான் இன்றைக்கு கொண்டு வந்துள்ளேன். நேற்று நடந்த விஷயத்திற்கு எதற்கு, ஏன் என்று நான் பதில் சொல்ல முடியாது. மக்கள் கோரிக்கைக்காக வேண்டி, மக்கள் எதற்காக நம்மை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை அறிந்து அவங்களுக்கு நல்லது பண்ண வேண்டி நான் வந்திருக்கிறேன். அதனால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
செய்தியாளர்கள்: கடந்த 1 1ஞூ2 வருடமாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையா? தொகுதியில் ஏதும் நிறைவேற்றப்படவில்லையா?
மைக்கேல் ராயப்பன்: தொகுதி மக்களின் கோரிக்கையை இப்போதுதான் நேரடியாக வைத்துள்ளேன். கடந்த வருடங்களில் கோரிக்கை வைத்துக் கொண்டுதான் இருந்தோம். தொகுதி மக்களுக்காக முதலமைச்சரை நேரடியாக சந்திக்க வேண்டுமென்று வாய்ப்பு கேட்டோம். முதலமைச்சர் நேரம் ஒதுக்கி கொடுத்தார். இப்போது அவரை நேரடியாக பார்த்து மக்கள் கோரிக்கைகளை கொடுத்திருக்கிறோம்.
செய்தியாளர்கள்: சட்டமன்றத்தில் யாருடைய தலைமையின் கீழ் இனி செயல்படுவீர்கள்?
மைக்கேல் ராயப்பன்: இப்போது தொகுதி மக்களின் கோரிக்கைகளை வைத்துள்ளோம். மற்றவைகளை பிறகு பேசிக் கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் பேட்டியின்போது கூறினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –17-01-2026
17 Jan 2026 -
இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமானுவேல் சேகரனாருக்கு பரமக்குடியில் மணிமண்டபம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
17 Jan 2026பரமக்குடி, பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வே. இமானுவேல் சேகரனார் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
17 Jan 2026சென்னை, தமிழகத்தில் 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
யு.பி.ஐ. மூலம் இ.பி.எப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்
17 Jan 2026சென்னை, யு.பி.ஐ. மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் வசதி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
மேற்கு வங்கம் -அசாம் இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2026கொல்கத்தா, மேற்கு வங்கத்தின் ஹவ்ரா ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலத்தின் கவுகாத்தி காமாக்யா ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சே
-
சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் படுகொலை
17 Jan 2026ராய்ப்பூர், சத்தீஷ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
-
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: போட்டியை நேரில் கண்டுகளித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
17 Jan 2026அலங்காநல்லூர், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நேற்று நேரில் கண்டுகளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்
-
ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு அரசு வேலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
17 Jan 2026அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடைப் பராமரிப்புத்துறையில் அரசுப் பணி வழங்கப்படும் என முதல்வர் மு.க.
-
அடுத்த 2 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு
17 Jan 2026சென்னை, அடுத்த இரு நாட்களுக்குள் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தைவிட்டு விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
17 Jan 2026சென்னை, மகளிருக்கு மாதம் ரூ. 2,000, ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து உள்ளிட்ட முதற்கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அ.தி.மு.க.
-
தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு 6,453.54 கோடி ரூபாய் பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை: அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம்
17 Jan 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் 2.15 கோடி பேருக்கு ரூ.6,453.54 கோடி பொங்கல் ரொக்க பணம் வழங்கி சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் : அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
17 Jan 2026சென்னை, கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எ
-
பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத பொருட்களை பிப்ரவரி மாதமும் சேர்த்து வழங்க கோரிக்கை
17 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தால் ஜனவரி மாத ரேஷன் பொருட்களை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை அடுத்து அந்த பொருட்களை பிப்ரவரி மாதம் சேர்த்து வழங்க பொதுமக்கள் கோரிக்
-
மராட்டியத்தில் பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி 116 வார்டுகளில் வெற்றி: மும்பையில் ‘தாக்கரே’வின் ஆதிக்கத்தை தகர்த்த பா.ஜ.க.
17 Jan 2026மும்பை, மராட்டியத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மும்பையில் 25 ஆண்டுகால ‘தாக்கரே’ ஆதிக்கத்தை பா.ஜ.க. தகர்த்துள்ளது. மேலும் அங்கு பா.ஜ.க.
-
சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.தி.மு.க. தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து வெளியிட்டுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்
17 Jan 2026சென்னை, தி.மு.க. அரசின் பழை திட்டங்களை காப்பியடித்து சட்டசபை தேர்தல் அறிக்கையாக அ.இ.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் விழா கோலாகலம் சுற்றுலா தலங்களில் அலைமோதிய கூட்டம்
17 Jan 2026சென்னை, காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
-
சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர்: எம்.ஜி.ஆருக்கு விஜய் புகழாரம்
17 Jan 2026சென்னை, மறைந்த எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு சாமானியர்களுக்கும் அதிகாரமளித்தவர் என்று த.வெ.க. தலைவர் விஜய் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
-
வாழ்க்கையை ஏழைகளுக்கு அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம்
17 Jan 2026புதுடெல்லி, எம்.ஜி.ஆரின் வாழ்க்கையும், முழு அரசியல் பயணமும் ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சமூகத்தின் இளைஞர்களும் பெண்களும் அவரை மிகவும் மதித்தனர் என்றும் பிரதம
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி: பிரதமர் மோடி
17 Jan 2026கொல்கத்தா, திரிணமூல் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஆட்சிக்கு பா.ஜ.க. வந்தால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
வார ராசிபலன்
17 Jan 2026


