எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், நவ. - 29 - உலகில் முதன்முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ஜோசப் முர்ரே காலமானார். அவருக்கு வயது 93. அமெரிக்காவின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் டாக்டர் ஜோசப் முர்ரே. அவர் கடந்த 1954 ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். இதன் மூலம் உலகிலேயே முதன் முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் அவர் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் உடற்கூறு குறித்த ஆய்வுகள் நடத்தினார். மருத்துவ உலகில் அவரது சாதனையை பாராட்டும் வகையில் அவருக்கு கடந்த 1990 ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. பாஸ்டனில் வசித்து வந்த ஜோசப்புக்கு கடந்த வியாழக்கிழமையன்று வாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை இறந்தார். அவர் அறிமுகப்படுத்திய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையால் இன்று உலகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


