எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் நவ. 30 - சேலம் , தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் பொதுமக்களை அதிர்ச் சிக்குள்ளாக்கி விட்டது. 3 மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளிலும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. நேற்று அதிகாலை 350 மணிக்கு இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது வேகமான சத்தத்துடன் சூறாவளி காற்று வீசியது. ஆடுகள், மாடுகள் பெருத்த ஓசையுடன் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓடியதால் பயந்துபோன பொதுமக்கள் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளை எடுத்துக்கொண்டு சாலைகளில் வந்து நின்றனர். கிருஷ்ணகிரி பகுதியில் நிலநடுக்கம் 3.3 என பதிவாகியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவிற்குட்பட்ட குள்ளாத்திராம் பட்டி, குருக்கலையனூர், மஞ்சார அள்ளி, ஈச்சூர், நாகமறை, ராமகுண்ட அள்ளி, மத்தாளபள்ளம், ஏரியூர், நெருப்ர், பெரும்பாலை, ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. வெடி வெடிப்பது போன்ற சத்தம் போல் கேட்டது.
மேலும் இந்தபகுதியில் வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. இதனால் ஆண்களும், பெண்களும் அலறி அடித்து விட்டு வீட்டை விட்டு ஓடி வந்தனர். சிலர் கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டு தெருவுக்கு ஓடி வந்து கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வெட்டவெளி சாலையில் நின்றனர். சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
கிராமங்களில் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த ஆடு, மாடுகள் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடின. அவை சத்தம் போட்டுக் கொண்டு ஓடியதால் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் வெளியே ஓடி வந்து பார்த்த போது தான் சிலருக்கு நில நடுக்கம் ஏற்பட்ட தகவல் தெரிந்தது. சில கிராமங்களில் நில நடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு நாய்கள் ஊளையிட்டுக்கொண்டு ஓடி உள்ளன.
இந்த சத்தத்தை கேட்டு சிலர் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். அப்போது சூறாவளி காற்று அடித்ததால் எப்படி சத்தம் வருமோ அது போல நிலநடுக்க சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
ஈச்சூர் கிராமத்தில் கோவிந்தன் என்பவரது ஓட்டு வீட்டில் 4 இடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி பேருராட்சிக்குட்பட்ட சாம்ராஜ்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், மற்றும் மேட்டூர் அணையின் தண்ணீர்தேக்கப் பகுதிகளான கூனாண்டியூர், கீரைக்காரனூர், மற்றும் பொட்டனேரி, அரங்கனூர், வெள்ளார் பேரூ ராட்சிக்குட்பட்ட எருமப்பட்டி, நங்கவள்ளி, வனவாசி,ஜலகண்டாபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.இந்த நில நடுக்கம் 5 முதல் 8நொடிகள் வரை இருந்தது. . நில நடுக்கம் ஏற்பட்ட போது கட்டில் குலுங்கியது. பாத்திரங்கள் உருண்டன. தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் கொட்டும் பனியிலும் வீட்டுக்கு வெளியே ரோடுகளில் நின்றனர். நிலநடுக்கத்தினால் நங்கவள்ளி அருகே தாச காப்பட்டியில் முனியப்பன் என்பவரது வீட்டில் விரிசல் ஏற்பட்டது.
மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகே கூத்தனூரில் ஆஸ்பெட்டாஸ் கூரைகள் நிலநடுக்கத்தால் உராய்ந்து இடி சத்தம் போல கேட்டதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், கோவிந்தப்பாடி, குருமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அதிகாலை 4 மணிக்கு முன்பு நில நடுக்கம் ஏற்பட்டு இருந்தாலும் காலை 8 மணி வரை பெண்களும், ஆண்களும் நிலநடுக்க அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பீதியில் அவர்கள் தெருவில் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல பயந்தனர். மீண்டும் நில நடுக்கம் வந்து விடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உள்ளனர். தாரமங்கலத்தில் அதிகாலை நேரத்தில் ரெயில் போவது போல் திடீரென சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருட்கள் குலுங்கியது.
இதனால் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி, கஞ்ச நாயக்கன்பட்டி, சின்ன திருப்பதி, ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


