எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.31-சென்னையில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சென்னை ஒருநாள் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரு 20 ஓவர் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதில் 20 ஓவர் போட்டியில்இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் முடிந்தது.
அடுத்து பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட முதலா வது ஒருநாள் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் போட்டி பாதிக்குமோ என ரசிகர்களிடம் அச்சம் ஏற்பட்டது. ஆனால் இரவில் மழை இல்லை.
நேற்று காலையில் வெயில் அடித்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். மழை காரணமாக ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருந்ததால் சேதம் அடையாமலும் மழை நீnullர் புகாமலும் இருந்தது. ஆனால் ஆடுகளத்தின் வெளிப்பகுதி ஈரமாக இருந்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு போட்டி தொடங்கும் என்றும் ஓவர் குறைக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது. 9.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பாஉல்ஹக் ஜெயித்து இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தார்.
மைதானம் ஈரமாக இருப்பதால் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் . பேட்ஸ்மேன்களுக்கு முதல் 20 ஓவர் கடினமாக இருக்கும் என்று கருதி இந்த முடிவை எடுத்தார். அறிவித்தபடி 10 மணிக்கு போட்டி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக், காம்பீர் களம் இறங்கினார்கள். பாகிஸ்தான் கேப்டன் கணிப்புபடி மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய வீரர்கள் ரன் எடுக்க தடுமாறினார்கள்.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜுனைத்கான், முகமது இர்பான் அசுரவேகத்தில் பந்து வீசி இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். 3 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்ட போது இந்தியா 17 ரன்களே எடுத்து இருந்தது. 4வது ஓவரில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. ஜுனைத்கான் பந்தில் ஷேவாக் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து கோலி வந்து காம்பீருடன் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் மோசமான நிலையில் இருந்ததால் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. காம்பீர் 8 ரன்னில் இர்பான் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். தொடர்ந்து கோலி ரன் எடுக்காமலும், யுவராஜ்சிங் 2 ரன்னுடனும் அடுத்தடுத்து கிளீன் போல்டு ஆனார்கள்.
அடுத்து சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். 5.6 ஓவர்கள் வீசி முடிக்கப்பட்டபோது இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்களுடன் பரிதாபமான நிலையில் இருந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஜுனைத்கான் அபாரமாக பந்துவீசி ஷேவாக், கோலி, யுவராஜ்சிங் ஆகிய 3 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், காம்பீர் விக்கெட்டையும் அடுத்தடுத்து கைப்பற்றினார்கள். 4 விக்கெட்டுகளுமே கிளீன் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது.
அடுத்து ரெய்னாவும், ரோகித்சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். அப்போது ரோகித் சர்மா 4 ரன்னில் ஜுனைத்கான் பந்தில் அவுட் ஆனார். 5 விக்கெட்டுகளை பறி கொடுத்ததால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் டோனி களம் இறங்கினார். அவர் ரெய்னாவுடன் நிலைத்து நின்று ஆடி அணியை மோசமான சரிவில் இருந்து மீட்டார்.
5 விக்கெட்டுகள் விழுந்தபோது இந்தியா 9.4 ஓவரில் 29 ரன் என்ற நிலையில் இருந்தது. அதன்பிறகு டோனி ரெய்னா ஜோடி ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தி 31வது ஓவரில் 100 ரன் என்ற நிலைக்கு கொண்டு சென்றது. ஸ்கோர் 102 ரன் ஆக இருந்தபோது சுரேஷ் ரெய்னா முகமது ஹபிஸ் பந்தில் போல்டு ஆனார். ரெய்னா 88 பந்துகளை சந்தித்து 43 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரிகள் மட்டும் அடித்தார்.
ரெய்னா அவுட் ஆனதும் தமிழக வீரர் அஸ்வின் வந்தார். ஆட்டத்தில் 39வது ஓவரில் டோனி பிரிஹிட் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சிக்சர் அடித்தார். அடுத்து அரை சதத்தை தொட்டார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் டோனி பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி சதம் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் சேர்த்தது. கேப்டன் டோனி 113 ரன்களுடனும், அஸ்வின் 31 ரன்களுடனும், களத்தில் அவுட் ஆகாமல் இருந்தனர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள்.பாக் வீரர் முகமது ஹபீஸ் ரன் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.பின்னர் வந்த வீரர்கள் பொறுப்புடன் விளையாடினார்கள். 48.1 ஓவரில் பாக் அணி 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது., நஷீர் ஜாம்ஷெத் 101 ரன்களும்,யுனுஸ்கான் 58 ரன்களும் எடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


