முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

புதன்கிழமை, 22 ஜூன் 2022      உலகம்
earthquake-2022-06-02

Source: provided

லாகூர் : பாகிஸ்தானின் சில பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வானிலை ஆய்வு மைய தகவலின்படி, நேற்று அதிகாலை 1.54-க்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்டிலிருந்து 44 கி.மீ தென்மேற்கே 50.8 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தானின் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

பெஷாவர், இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பஞ்சாபின் பிற பகுதிகளிலும், கைபர்-பக்துன்க்வா மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

கடந்த ஜூன் 17 அன்று நாட்டின் சில பகுதிகளில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.  2005ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து