முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 3 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
modi-2022 06 30

Source: provided

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கலப்பு பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இரண்டாம் இடம் பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர், இந்திய அணியின் சாதனைக்காக பெருமைப்படுவதாக கூறினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " இந்தியாவில் பேட்மிண்டன் மிகவும் போற்றப்படும் விளையாட்டுகளில் ஒன்றாகும். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பேட்மிண்டன் விளையாட்டை இன்னும் பிரபலமாக்குவதற்கும், வரும் காலங்களில் அதிகமான மக்கள் விளையாட்டை தொடருவதை உறுதி செய்வதற்கும் உதவும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

----------------

சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்குக் கெளரவ டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கவுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2020ல் ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா. 35 வயது சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள், 78 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 205 ஆட்டங்களில் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸின் முக்கிய வீரராக அறியப்பட்டார். 

இந்நிலையில்  சுரேஷ் ரெய்னாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்க வேல்ஸ் பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனா், வேந்தா் ஐசரி கே. கணேஷ், ட்விட்டரில் கூறியதாவது: ஆகஸ்ட் 5 அன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திடமிருந்து கெளரவ டாக்டர் பட்டத்தை சுரேஷ் ரெய்னா பெறுவார் என்று கூறியுள்ளார். 

_____________

சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ்: ஆஸ்திரேலிய வீரர் முன்னேற்றம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சிட்டி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 2-ம் சுற்றுக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னனி வீரர் கிர்ஜியாஸ் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் கிரிஜியாஸ், அமெரிக்க வீரர் மார்கஸ் கைரோனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-ம் சுற்றுக்குள் கிர்ஜியாஸ் நுழைந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து