எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மனித உரிமைகள் பறிக்கப்பட்டு விடக்கூடாது என்றும், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் நேற்று சென்னையில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டமானது 1993-ம் ஆண்டு உருவாக்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையமானது 1997-ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் 1996-ம் ஆண்டு அமைந்த பிறகுதான், மாநில மனித உரிமை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை 20.12.1996 அன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி நயினார் சுந்தரத்தை தலைவராக நியமித்தது தி.மு.க. அரசு.
மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதனின் மாண்புகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். தந்தை பெரியார், முதன்முதலில் தான் உருவாக்கிய அமைப்புக்கு சுயமரியாதை இயக்கம் என்றுதான் பெயர் சூட்டினார்.
சுயமரியாதை என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உயிரினும் மேலானது. மனித உரிமைக்கு அடித்தளமானதும் சுயமரியாதைதான். அதனால்தான் தனிமனிதனின் சுயமரியாதையாக இருந்தாலும், ஓர் இனத்தின் தன்மானமாக இருந்தாலும் அவை எந்தக் காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது. பறிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,
மாநில மனித உரிமை ஆணையத்தின் இந்த வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு சில அறிவிப்புகளை நான் வெளியிட விரும்புகிறேன். ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆணையத்தின் விசாரணைக் குழுவில் காவல் துறையினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது குறித்து விரைவில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும். மனித உரிமைத் தகவல்கள் அனைத்தும் அனைத்து மக்களையும் சென்றடைய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
மனித உரிமைக் கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், அதனை எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும் அனைத்து தரப்பினருக்கும் அறிவுறுத்த பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும். எந்தவொரு தனிமனிதனின் உரிமையும் மீறப்படக் கூடாது. எத்தகைய சமூகமும் எதன் பொருட்டும் இழிவுபடுத்தப் படக் கூடாது. இதற்குக் காரணமான யாரும் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பி விடக்கூடாது. இவை மூன்றும் தான் இந்த அரசினுடைய மனித உரிமைக் கொள்கை என்பதை அறிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் எனது சில கோரிக்கைகளை முன்வைக்கவும் நான் விரும்புகிறேன். பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழி ஆக்கப்பட வேண்டும். இவை சட்டத்தின் ஆட்சியில் மக்களின் கோரிக்கைகளாக இவை அமைந்துள்ளன. மாநில மனித உரிமை ஆணையமானது இத்தகைய சமூகநீதி சமூகத்தை உருவாக்க அனைத்து வகையிலும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2025.
07 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.
-
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் * லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் * பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு
06 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் இந்தியா
06 Jul 2025பர்மிங்காம்: ஆகாஷ் தீப் அபார பந்து வீச்சு காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது.
-
முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை தமிழ்நாடு அரசு பெருமிதம்
06 Jul 2025சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உ
-
சென்னையில் மினி மாரத்தான் போட்டி: அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
06 Jul 2025சென்னை: சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மேயர் ஆகியோர் பங்கேற்றனர்.
-
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை சந்தித்து நலம் விசாரித்தார் மா.சுப்பிரமணியன்
06 Jul 2025சென்னை: நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் நலம் விசாரித்தார்.
-
ஜூலை 8-ல் த.வெ.க. பயிற்சி பட்டறை ஆலோசனைக்கூட்டம்
06 Jul 2025சென்னை: த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைப் பணிக்கான பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம், ஜூலை 8ம் தேதி பனையூரில் நடக்க உள்ளதாக அக்கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.