முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு: சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      இந்தியா
Ashwini-Vaishnav 2022-08-12

Source: provided

சென்னை : வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.-ல் உலக புகழ் பெற்ற ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் 'ரெயில்-18' என்ற அதிநவீன ரெயில் தயாரிக்கப்பட்டது.

மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு 'வந்தே பாரத் விரைவு ரெயில்' என்று பெயரிடப்பட்டது. இந்த ரெயில் புதுடெல்லி-வாரணாசி இடையேயும், புதுடெல்லி-காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. சொகுசாகவும், விரைவாகவும் பயணிக்க வசதியாகவும் இருப்பதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பயணிகள் வரவேற்பு காரணமாக கூடுதலாக வந்தே பாரத் ரெயில்களை தயாரித்து வழங்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை ஐ.சி.எப்., கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதில் சென்னை ஐ.சி.எப்-ல் மட்டும் 102 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக ஒரு வந்தே பாரத் ரெயில் தற்போது தயாராகி உள்ளது. இந்த ரெயில் இயக்கப்பட்டு விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் புதிய மாதிரிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். 

அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரெயிலை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெயிலின் அடிப்புற பகுதியில் உள்ள ஒவ்வொரு சாதனங்களையும் பார்த்து அவர் ஆய்வு செய்தார். ரெயிலில் உள்ள நவீன அம்சங்களை பார்வையிட்டு அதன் வசதிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து