எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரான்பூர் மாவட்டத்தில், செப்.16-ம் தேதி நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான கபடி போட்டியின்போது அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், கழிப்பறையின் வாசல் ஒன்றில் சிறுநீர் கழிக்கும் கோப்பைகளுக்கு அருகில் சாதம், குழம்பு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து கேமரா அந்தக் கழிப்பறையையும், அங்கிருக்கும் சிறுநீர் கோப்பைகளையும் காட்டுகின்றது.
கூடவே, கழிப்பறையின் தரையில் ஒரு தாளின் மீது திறந்தநிலையில் பூரி வைக்கப்பட்டுள்ளதும் காட்டப்படுகின்றது. வீராங்கனைகள் அவற்றில் இருந்து தேவையான உணவுகளை தட்டில் எடுத்து வைத்துச் சாப்பிடுகின்றனர். இரண்டாவது வீடியோ ஒன்றில், தொழிலாளர்கள் வெளியே நீச்சல் குளத்தின் அருகில் சமையல் செய்த இடத்தில் இருந்து பாத்திரங்களை எடுத்து வருவது காட்டப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து, ஆளும் பாஜக அரசு கபடி வீராங்கனைகளை அவமானப்படுத்திவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
டி-20 தரவரிசையில் மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
டெர்பியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார் மந்தனா. இதையடுத்து முதல்முறையாக டி20 தரவரிசையில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 3-வது இடத்தில் இருந்த மந்தனா, மெக் லேனிங்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு 2-வது இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
அதேபோல ஒருநாள் தரவரிசையில் 7-ம் இடத்துக்கு மந்தனா முன்னேறியுள்ளார். முதல் ஒருநாள் ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தார். இதனால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கெளர் 9-வது இடத்தில் உள்ளார்.
சச்சினின் 100 சதங்களை கோலி தாண்டுவாரா? பாண்டிங் பதில்
சச்சினின் 100 சர்வதேச சதங்களை விராட் கோலி தாண்டுவது குறித்த கேள்விக்கு ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதில் அளித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 டெஸ்டுகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் மொத்தமாக 100 சதங்களை எடுத்துள்ளார். இந்தச் சாதனையை எந்த வீரராலும் தொட முடியாது என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். இந்தியாவின் விராட் கோலியும் ஓய்வு பெற்ற ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தலா 71 சதங்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி 100 சதங்களை எடுப்பாரா என்கிற கேள்விக்கு ரிக்கி பாண்டிங் கூறியதாவது., மூன்று வருடங்களுக்கு முன்பு, சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோலி தாண்டுவாரா எனக் கேட்டிருந்தால் ஆமாம் எனப் பதில் சொல்லியிருப்பேன். கோலி இன்னும் பல வருடங்கள் விளையாடப் போகிறார். இன்னும் 30 சதங்கள் எடுக்க வேண்டும் என்பது கடினமான இலக்கு. அதேசமயம் விராட் கோலியால் எதுவும் முடியாது என நான் சொல்ல மாட்டேன். நன்கு விளையாட ஆரம்பித்து விட்டால், அவர் எந்தளவுக்குப் பசியுடன் இருக்கிறார், சாதிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது தெரியும் என்றார்.
டிரா செய்த பிரக்ஞானந்தா: கைதட்டி பாராட்டிய கார்ல்சன்
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
முதல் நாளன்று இந்தியாவின் பிரக்ஞானந்தா - இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார். முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் இருந்தார்கள்.2-வது நாளன்று அனைவரும் எதிர்பார்த்த கார்ல்சனுடனான ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா. கடைசி வரை கடுமையாகப் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு இறுதியில் கைத்தட்டிப் பாராட்டு தெரிவித்தார் கார்ல்சன். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
ஏலத்தில் யாரும் சீந்தாத தெ.ஆ. டி20 உலகக் கோப்பை கேப்டன்
2023 ஜனவரி மாதம் ஆறு அணிகள் பங்கேற்கும் புதிய டி20 லீக் போட்டியை சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்துகிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். தெ.ஆ. டி20 லீக் போட்டியின் தலைவராக முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செயல்படுவார். தெ.ஆ. டி20 லீக் போட்டியில் பங்கேற்கும் ஆறு அணிகளையும் ஐபிஎல் உரிமையாளர்கள் விலைக்கு வாங்கியுள்ளார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் இடம்பெறுவார்கள். அவர்களில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டனாகச் செயல்படவுள்ள டெம்பா பவுமாவை வீரர்களின் ஏலத்தில் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. அதேபோல தெ.ஆ. டெஸ்ட் கேப்டன் டீன் எல்கரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. ஏலத்தில் பவுமாவின் அடிப்படை விலையாக ரூ. 38.25 லட்சமும் எல்கரின் அடிப்படை விலையாக ரூ. 7.87 லட்சமும் இருந்தன. எனினும் எந்த அணியும் இருவரையும் சீந்தவில்லை. தென்னாப்பிரிக்கா புதிதாக ஆரம்பித்துள்ள டி20 லீக் போட்டியில் தெ.ஆ. அணியின் டி20 உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை என்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு விமர்சனங்களையும் வரவழைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிப்பு
20 Jul 2025புதுடில்லி : பயங்கரவாதி மசூத் அசார் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள