முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த கூட்டணியிலும் பா.ம.க. இல்லை: அன்புமணி 'திடீர்' அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      அரசியல்
Anbumani 2022 09 23

எந்த கூட்டணியிலும் பா.ம.க. இல்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இடம் பெற்று இருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட்டது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது பா.ம.க. எந்த கூட்டணியிலும் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலிலும் தனித்துதான் போட்டியிட்டோம். கூட்டணி பற்றி பாராளுமன்ற தேர்தலின்போது முடிவெடுக்கப்படும். எங்களுடைய நோக்கம் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தான். அதற்கு ஏற்ப யுக்திகளையும், வியூகங்களையும் 2024 பாராளுமன்ற தேர்தலின்போது எடுப்போம் என்றார்.

அன்புமணி தலைவராக பொறுப்பேற்றதும் பாட்டாளி நல கூட்டணி என கூறிவந்தார். அனைத்து கட்சிகளுடனும் இணைந்து கூட்டணி ஆட்சி முறை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை அமைக்க பா.ம.க. முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து