முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3,900 பேரை பணி நீக்கம் செய்யும் ஐ.பி.எம். நிறுவனம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2023      உலகம்
IBM 2023 01 27

Source: provided

வாஷிங்டன் : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம் 3900 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. 

உலகமெங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே  மைக்ரோசாப்ட், அமேசான்,  கூகுள், சாப்டிபை, மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை  பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர்  இந்தியாவை சேர்ந்த மென்பொருள் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்(ஐ.பி.எம்) நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. மொத்தம் 3900 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவீதம் ஆகும். 

இந்த அறிவிப்பால் ஐ.பி.எம். நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் அதிகம் பேர் வேலை இழப்பார்கள் . தொடரும் பணி நீக்க அறிவிப்பால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து