முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியா ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

 

அகமதாபாத், பிப். 22 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அகமதாபாத் நகரில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 91 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை எளிதாக வீழ்த்தியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 -வது லீக் ஆட்டம் குஜ ராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் படேல் அரங்கத்தில் நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும், ஜிம்பா ப்வே அணியும் மோதின. 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஜிம்பாவேயின் பந்து வீச்சில் சற்று திணறியது. இறுதியில் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 262 ரன்னை எடு த்தது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், துவக்க வீரர் வாட்சன் அதிகபட்சமாக, 92 பந்தில் 79 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் கிரமர் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு. வாகி வெளியேறினார். 

அடுத்தபடியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மைக்கேல் கிளார்க் 55 பந்தில் 58 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, மற்றொரு துவக்க வீரரான ஹாடின் 66 பந்தில் 29 ரன்னையும், கேப்டன் ரிக் கி பாண்டிங் 36 பந்தில் 28 ரன்னையும், ஒயிட் 36 பந்தில் 22 ரன்னையும் எடுத்தனர். 

ஜிம்பாப்வே அணி சார்பில், போபு 58 ரன்னைக் கொடுத்து 2 விக்கெ ட் எடுத்தார். தவிர, பிரைஸ், உத்செயா மற்றும் கிரமர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். வில்லியம்ஸ், டெய்லர் மற்றும் சிகும் புரா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

ஜிம்பாப்வே அணி 263 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி வைத்தது. ஆனால் அடுத்து பேட்டிங் செய்த அந்த அணி 46. 2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 171 ரன்னை எடுத்தது. 

இதனால் ஆஸ்திரேலிய அணி 91 ரன் வித்தியாசத்தில் இந்தப் போட்டி யில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

ஜிம்பாப்வே அணி தரப்பில், பின்வரிசை வீரரான கிரமர் அதிகபட்ச மாக, 51 பந்தில் 37 ரன்னை எடுத்தார். தவிர, வில்லியம்ஸ் 40 பந்தில் 28 ரன்னையும், உத்செயா 45 பந்தில் 24 ரன்னையும், காவென்டிரி 14 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், ஜான்சன் 19 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். தவிர, டெய்ட் மற்றும் கிரேஜா ஆகியோர் தலா 2 விக் கெட்டையும், பிரட்லீ மற்றும் ஜே. ஹஸ்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago