முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தயிர் உருளைக்கிழங்கு

Cooking time in minutes: 
20
Ingredients: 

தயிர் உருளைக்கிழங்கு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. உருளை கிழங்கு - 1/2 கிலோ.
  2. தயிர் - அரை கப்.
  3. பொடியாக நறுக்கிய மல்லி புதினா - சிறிதளவு.
  4. குங்குமப்பூ(ஊறவைத்தது) - 1 கிராம்.  
  5. கார்ன் பிளவர் மாவு  - 3 டீஸ்பூன். 
  6. ஏலக்காய் - 3.
  7. கிராம்பு - 3.
  8. கருஞ் சீரகம் - 1/2 டீஸ்பூன்.
  9. பச்சை மிளகாய் - 2.
  10. பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 1. 
  11. இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  12. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்.
  13. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
  14. எண்ணெய் – சிறிதளவு.
  15. கரம் மசாலா  தூள் - 1 டீஸ்பூன்.
  16. பொடியா நறுக்கிய தக்காளி - 1.
  17. பட்டர் - 1 ஸ்பூன்.
  18. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1/2 கிலோ உருளை கிழங்கை போட்டு 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் வேக வைத்த உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி  தோல் உரித்து நறுக்கி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரை கப் தயிர் ஊற்றி நன்றாக கலந்து விட்டு பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா, மல்லி,3 டீஸ்பூன் கார்ன் பிளவர் மாவு,மற்றும் ஊறவைத்த ஒரு கிராம் குங்குமப்பூவை  போட்டு கலந்து விட்டு தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் 3 ஏலக்காய், 3 கிராம்பு, 1/2 டீஸ்பூன் கருஞ் சீரகம்,விதை நீக்கிய பச்சை மிளகாய் 2, மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  6. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது,பொடியாக நறுக்கிய சிறிதளவு புதினா, மல்லி இலை 2 டீஸ்பூன், மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் மல்லித்தூள்,1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்,1 டீஸ்பூன் கரம் மசாலா பொடியா நறுக்கிய ஒரு தக்காளி தேவையான அளவு உப்பு ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு நன்றாக வதக்கவும்.
  7. இதனுடன் வேக வைத்த உருளை கிழங்கை போட்டு  வதக்கவும்.
  8. இதனுடன் கலந்து வைத்துள்ள தயிர்கலவை,ஒரு ஸ்பூன் பட்டர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு,சிறிதளவு தண்ணீர் ஊற்றி  கலந்து விட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடங்கள் வேக வைக்கவும். 
  9. 5 நிமிடங்கள் கழித்து முடியை திறந்து கலந்து விடவும்.
  10. சுவையான தயிர் உருளைக்கிழங்கு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago