முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிய கேலரியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார் : சி.எஸ்.கே கேப்டன் டோனி - பிரேவோ பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 17 மார்ச் 2023      விளையாட்டு
CM-6 2023 03 17

Source: provided

சென்னை : சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிய கேலரியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.கே கேப்டன் டோனி மற்றும் பிரேவோ பங்கேற்றனர்.

புதுப்பிக்கும் பணி... 

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் 2011 உலக கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலயன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டது.

கலைஞர் பெயரில்...

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைத்தார். கலைஞர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள ஸ்டாண்டை அவர் திறந்து வைத்தார். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, பிரேவோ உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

22-ம் தேதி மோதல்...

இதற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது அவரது பெயரிலான பெவிலியனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து