முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சி: அரசு ஊழியர்களுக்கு இறையன்பு அழைப்பு

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      தமிழகம்
iaiyanpu 2022 09 24

அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அழைப்பு விடுத்துள்ளார். 

இது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி நம்ம ஊர் பள்ளி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் முன்னெடுப்பாக https://nammaschools.tnschools.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி உள்ளே சென்று பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த இணையதளத்தில் பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களையும் இந்த குழுவில் இணைத்து கொள்ள அழைப்பு விடுக்கும் அமைப்பு உள்ளது. அதை பயன்படுத்தி பள்ளியில் பயின்ற நண்பர்களையும் இக்குழுவில் இணைக்கலாம் என்று கூறப்படுகிறது. 

நாம் பயின்ற பள்ளிக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை செய்வதன் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்த முடியும். நம் பள்ளி முதலில் எப்படி இருந்தது, நம் பங்களிப்பினால் எப்படி மாறியிருக்கிறது என்பதை இணையதளம் வாயிலாக பார்க்க முடியும். இந்த வெளிப்படை தன்மையே இந்த திட்டத்தின் சிறப்பம்சம் ஆகும். 

நாம் அனைவரும் இணைந்தால் தமிழ்நாட்டிலிருக்கும் அரசு பள்ளிகள் அனைத்தும் கல்வியிலும், கலைகளிலும், திறன்களிலும், அழகிலும், சுற்றுச்சூழலிலும், அமைதியிலும் உலகத்திற்கே ஒளி காட்டும் தீப்பந்தங்களாக திகழும். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து