முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளரை மிரட்டிய வழக்கு: சஞ்சய் தத்துக்கு ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஏப். 24 - திரைப்பட தயாரிப்பாளரை மிரட்டிய வழக்கு ஒன்றில் ஆஜராகாத பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஷகீல் நுராணி என்பவர் மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் கடந்த 2002 ம் ஆண்டு ஜான் கி பாஸி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக சஞ்சய் தத்துக்கு ரூ. 50 லட்சம் முன்பணம் கொடுத்திருந்தேன். ஆனால் சில காரணங்களுக்காக அந்த படத்தில் இருந்து சஞ்சய் தத் விலகி விட்டார். அவரிடம் கொடுத்த முன் பணத்தை கேட்ட போது பணத்தை திருப்பி தராததோடு என்னை மிரட்டவும் செய்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சஞ்சய் தத் ரூ. 2 கோடி தர வேண்டும் என உத்தரவிட்டது. அதையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் சஞ்சய் தத்தின் இரண்டு சொத்துகளை முடக்கி அந்த பணத்தை எனக்கு தர மும்பை நீதிமன்றம் கடந்த 2010 ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பிறகு சஞ்சய் தத் சார்பில் சமூக விரோதிகள் பலர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம் சஞ்சய் தத்தை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இரண்டு முறை உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்நிலையில் சஞ்சய் தத் தனது வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி ரூ. 10 ஆயிரம் பிணைத்தொகை செலுத்தி ஜாமீன் பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago