முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே தின விழா கொண்டாட்டம் - கட்சியினருக்கு விஜயகாந்த் உத்தரவு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.28 - மே தின விழா கொண்டாட்டங்களை மே 1ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் அதிகாரிகளிடம் தக்க அனுமதி பெற்று இவ்விழாக்களை கொண்டாட வேண்டும் என்றும் தே.மு.தி.க.வினருக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக  தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எல்லோரும் உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பை சுரண்டி வாழக் கூடாது என்ற உயர்ந்த குறிக்கோளுக்கு அடிக்கல் நாட்டிய நாள்தான் மே தினமாகும். உழைப்பாளிகளை முதலாளிகள் அடிமைகளாக நடத்தியதற்கு முற்றுப்புள்ளி வைத்த நாள்தான் மே தினநாள். உழைப்பவர்களும் உரிமை உடையவர்கள் என்பதை நிலைநாட்ட உயிரையே பணயம் வைத்த வரலாறு மே தினத்திற்கு உண்டு. எட்டு மணிநேர வேலை, எட்டு மணிநேர ஓய்வு, எட்டு மணிநேர உறக்கம் என்ற தொழிலாளி வர்க்கத்தின் உன்னத முழக்கத்தை உலகுக்கு உணர்த்திய நாள்தான் பாட்டாளி வர்க்கத்தினர் கொண்டாடி வரும் மேதினமாகும். உழைப்புக்கு உயர்வு தேடும் இந்த நன்னாளை தேசிய முற்போக்கு திராவிட கழகமும், அதனைச் சார்ந்த தொழிற்சங்கப் பேரவையும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு தேர்தல் காலம் ஆதலால், மே தின விழாவை கொண்டாட நமது இயக்கத் தோழர்கள் அரசாங்க அதிகாரிகளை அணுகி முறையான அனுமதி பெற்று கொண்டாட வேண்டும். மே தினத்தன்று கொடியேற்றம், ஊர்வலம், பொதுக் கூட்டம் போன்றவை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தேர்தல் கமிஷனால் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நமது தோழர்கள் எந்தெந்த பகுதியில் எத்தகைய விழாக்களை எடுக்க வேண்டுமோ, அதற்கான அனுமதியை முன்கூட்டியே முறையாக அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி பெற்று நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

மே மாதம் முதல் தேதியில் இருந்து மே மாதம் 8ஆம் தேதி வரை மே தின விழாவை கொண்டாடும்படியும், அனைத்து கழக, தொழிற்சங்கப் பேரவை மற்றும் அணி நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து பெருமளவில் பொது மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago