முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தர்பூசணி ஜெல்லி

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

தர்பூசணி ஜெல்லி செய்யத் தேவையான பொருட்கள்.

  1. தர்பூசணி - 1.
  2. சர்க்கரை - 100 கிராம்.
  3. கான் பிளவர் மாவு - 150 கிராம்.
Method: 

 

செய்முறை ;--

  1. ஒரு தர்பூசணி பழத்தை எடுத்து அதை பாதியாக அறுத்து உள்ளே உள்ள பழத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் எடுத்து வைத்த தர்பூசணி பழத்தை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து  தர்பூசணி பழ ஜூஸை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் தயார் செய்து வைத்துள்ள தர்பூசணி பழ ஜூஸில் பாதி அளவு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. இதனுடன் 100 கிராம் சர்க்கரை மற்றும் 150 கிராம் கான் பிளவர் மாவை போட்டு கட்டி இல்லாமல் நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் மீதமுள்ள தர்பூசணி பழ ஜூஸை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  6. இதனுடன் தர்பூசணி,சர்க்கரை,மற்றும் கான் பிளவர் மாவை போட்டு கரைத்து வைத்துள்ள தர்பூசணி பழ கலவையை ஊற்றி கெட்டியாக வரும்வரை நன்றாக கிண்டி பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
  7. சிறிது நேரம் ஆறவைத்து ஜெல்லி பேஸ்டை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் நிரப்பி சமப்படுத்தி மூடி போட்டு மூடி 3 மணி நேரம்  பிரிட்ஜில்  வைக்கவும்.
  8. 3 மணி நேரம் கழித்து பிரிட்ஜில் இருந்து ஜெல்லியை ஒரு தட்டில் எடுத்து கொண்டு அதை சிறு சிறு துண்டாக வெட்டி பரிமாறவும்.
  9. சுவையான தர்பூசணி ஜெல்லி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago