எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்டோபர் 20) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவதற்கு இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்வதே முதன்மைக் காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இரண்டு நாட்களில் ரூ, 1,160 தங்கம் உயர்ந்திருந்தது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,040-க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,500 ஆக இருந்தது.
“இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடரும் சூழலில், சர்வதேச அளவில் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். இதனால், தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போர் முடியும் வரை தங்கம் விலை ஏறுமுகத்தில் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


