முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் கரையை கடக்கும்போது மக்கள் வெளியே வரவேண்டாம் : தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Shivdas-Meena 2023-12-03

Source: provided

சென்னை : புயல் கரையை கடக்கும் போது மக்கள் வெளியே வர வேண்டாம் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தி உள்ளார். 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மயிலாப்பூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ள தளவாடங்களை அவர் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில் மழை நீர் வடிகால் பணிகள் பல பகுதிகளில் சரி செய்யப்பட்ட காரணத்தால் மழைநீர் தேங்கினாலும் சில மணி நேரங்களில் வடிந்து விடுகிறது. ஒரு சில பகுதிகளை தவிர மற்ற இடங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

கடந்த 3 நாட்களாக பெய்த மழையின் போது சென்னையில் தண்ணீர் தேங்கிய 150 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். அந்த பகுதியில் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் அகற்றி உள்ளோம். சென்னையில் 43 தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 

செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களையும் சேர்த்து 1,700 பேர் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர மீனவர் துறை சார்பாக மீனவ நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம்.

அதே மாதிரி பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், புயல் நெருங்கி வரும்போது காற்று வேகமாக வீசும் என்பதால் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தால் நன்றாக இருக்கும். சென்னையில் பல வீடுகளுக்கு கேபிள் மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இங்கு மின்சார ஜங்ஷன் பாக்ஸ் பல இடங்களில் 3 அடிக்கு உயர்த்தி வைத்திருப்பதால் தண்ணீர் தேங்கினாலும் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் தடையின்றி மின்சாரம் கிடைக்கும்.

அதிகம் காற்று வீசும்போது மட்டும் உயர்மின் அழுத்தம் கொண்ட இடங்களில் கட்டாயம் மின் சப்ளை நிறுத்தப்படும். ஆனால் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கும் இடங்களில் தடை ஏற்படாத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து