முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புழல் ஏரியிலிருந்து அதிகளவு வெளியேற்றப்படும் உபரி நீர்: தனித்தீவாய் மாறிப்போன குடியிருப்புகள்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
Puzhal-Lake

சென்னை, சென்னையில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 4,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால், புழல் ஏரியில் இருந்து 4,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இருந்து வெளியாகும் உபரி நீரால், செங்குன்றம் சுற்றியுள்ளப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகள் தீவுப்போல காட்சியளிக்கிறது.

மிக்ஜம் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்று சென்னை கடற்கரை அருகே உள்ளது. தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று இரவு வரை மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து