முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ டிரோன் தவறுதலாக தாக்கியதில் நைஜீரியாவில் கிராம மக்கள் 30 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      உலகம்
Nigeria 2023-12-05

Source: provided

நைஜர் : நைஜீரியாவின் கதுனா மாநிலத்தில் போராளிக் குழுவினரை மீது குண்டு வீசுவதற்காக ராணுவ டிரோனின் இலக்கு குறி தவறியதில் கிராம மக்கள் 30 பேர் பலியானார்கள். 

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராளிக் குழுவினரை குறிவைத்து அடிக்கடி வான் தாக்குதல்களை நடத்துகிறது.

இந்நிலையில், கதுனா மாநிலத்தில் போராளிக் குழுவினரை மீது குண்டு வீசுவதற்காக ராணுவம் ஆளில்லா விமானத்தை (டிரோன்) அனுப்பியது. ஆனால் இலக்கு குறிதவறிய நிலையில் துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன. 

இஸ்லாமிய பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதால், 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழப்பு குறித்து ராணுவம் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், உள்ளூர் மக்கள் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர். 

85 பேரின் சடலங்கள் புதைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து அங்கு தேடும் பணி நடைபெறுவதாகவும் தேசிய அவசர மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இதற்கு முன்பும் இதே போன்று ராணுவம் வீசிய வெடிகுண்டு, பொதுமக்களை பலி வாங்கியிருக்கிறது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லேக் சாட் பகுதியில் நடந்த தாக்குதலில் 20 மீனவர்கள் பலியாகினர். 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரான் நகரில் மக்கள் தங்கியிருந்த முகாம் மீது தவறுதலாக குண்டு வீசப்பட்டதில் 112 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து