முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை நம்பிக்கையுடன் இந்த முழு உலகமும் பார்க்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Modi-1 2023 04 03

Source: provided

புதுடெல்லி : கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தால் வளர்ச்சியைக் காணலாம் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ள  பிரதமர் மோடி, முழு உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதி சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது., "கொள்கைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும்போது, நல்ல நிர்வாகம் உறுதிப்படுத்தப்படும்போது, பொருளாதாரக் கொள்கையின் அடித்தளத்தை ஒரு தேசமும், தேசத்தின் மக்களும் உருவாக்கும்போது என்ன விளைவுகளை அடைய முடியும் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் 7.7 சதவீதமாக முன்னேறியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) இந்தியாவில் முதலீட்டுக்கு ஏற்ற சூழல் இருப்பதாக கூறியது. இன்று முழு உலகமும் இந்தியாவை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் பார்க்கிறது.

இதற்குக் காரணம், இந்தியாவின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும், கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் ஆகும். இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பருவநிலை மாற்றம். உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, இதனை குறைத்து மதிப்பிடவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து