முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 19-ம் தேதி இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது ஆலோசனை கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      இந்தியா
INDIA 2023-09-01

Source: provided

புதுடெல்லி : ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.  3 மாநிலங்களில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.இந்த தேர்தல் முடிவுகளின் தாக்கம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் கடந்த 6-ம் தேதி நடைபெற இருந்தது. பிறகு, ஆலோசனைக் கூட்டம் ஒத்திடைவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் வரும் 19-ம் தேதி அன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் டெல்லி வீட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பீகார் முதல்வர்  நிதிஷ்குமாரால் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில், சுமார் 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து