முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க முயற்சி: பல்லடத்தில் பேசிய பிரதமர் மோடி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      தமிழகம்      அரசியல்
Modi 2023-02-27

பல்லடம், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நடத்திவந்த 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் நேற்றஉ (பிப். 27) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மொழி தமிழ்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. எந்த வளர்ச்சியுமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும் திமுக எதையும் தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கொடுக்கப்பட்டதை விட தேசிய ஜனநாயக கூட்டணி 3 மடங்கு அதிக நிதி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க.வில் பலம் அதிகரிக்கும். தமிழகத்தில் பா.ஜ.க.வின் மீது பெரும் நம்பிக்கை வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்க முயற்சிகள் நடக்கின்றன. தமது நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள சிலர் பா.ஜ.க.வின் வளர்ச்சியை தடுக்கின்றனர். ஏழை மக்கள் அனைவருக்குமானதாக பா.ஜ.க. செயல்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்., "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது.

"எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து