எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவு குறித்தும், இளம் வீரர்களின் முடிவு குறித்தும் கருத்து தெரிவித்துள்ள இந்திய வீரரான விருத்திமான் சஹா கூறுகையில்.,
இது பி.சி.சி.ஐ.யின் முடிவாக இருக்கலாம். ஆனால் வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ. கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது. நான் எப்போதெல்லாம் பிட்டாக இருந்திருக்கின்றேனோ அப்போதெல்லாம் கிளப் போட்டிகள், ஆபீஸ் போட்டிகள் என அனைத்திலுமே பங்கேற்று விளையாடி உள்ளேன். நான் எப்பொழுதுமே ஒரு போட்டியை போட்டியாகத்தான் பார்க்கிறேன். அது எவ்வித போட்டியாக இருந்தாலும் எனக்கு சமமாகத்தான் தெரியும். சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள், கிளப் போட்டிகள் என்று எதையும் நான் பிரித்து பார்ப்பது கிடையாது என்று கூறியுள்ளார்.
____________________________________________
ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாளில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் அடித்திருந்தது. கிரீன் 103 ரன்களுடனும், ஹேசில்வுட் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகளும், வில்லியம் ஒ ரூர்க் மற்றும் ஸ்காட் குகெலீஜ்ன் தலா 2 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த கிரீன் - ஹேசில்வுட் இணை மேற்கொண்டு 104 ரன்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினர். இவர்களில் ஹேசில்வுட் 22 ரன்களில் மேட் ஹென்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 179 ரன்களில் சுருண்டது.
பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுமித் முதல் ஓவரிலேயே கிளீன் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆஸ்திரேலிய அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ரன்களுடன் தடுமாறி வருகிறது. உஸ்மான் கவாஜா 5 ரன்களுடனும், லயன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது வரை 217 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
____________________________________________
பிசிசிஐ-க்கு கபில்தேவ் ஆதரவு
இந்திய அணியில் இடம்பெறுவதற்கு உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும் என்ற பிசிசிஐ-ன் முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வரவேற்றுள்ளார். பிசிசிஐ-ன் இந்த முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிசிசிஐ-ன் இந்த புதிய முடிவினால் சில வீரர்கள் பாதிக்கப்படுவார்கள். சில வீரர்கள் காயமடைந்ததாக உணர்வார்கள். ஆனால், நாட்டுக்கு முன்பு எந்த ஒரு விஷயமும் பெரிது கிடையாது. உள்ளூர் போட்டிகளைப் பாதுகாக்க பிசிசிஐ எடுத்திருக்கும் இந்த முடிவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் இடம் பிடித்தவுடன் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை. இதனைப் பார்க்கும்போது உள்ளூர் போட்டிகளின் மதிப்பு குறைகிறது என வருத்தமாக இருக்கும். சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தங்களது மாநிலத்துக்காக விளையாடுவது இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றார். அண்மையில் வெளியிடப்பட்ட 2023-24 ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
____________________________________________
ஆஸி. வீரர் நேதன் லயன் சாதனை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சுழல்பந்து வீச்சாளர் நேதன் லயன் (36) 128 போட்டிகளில் விளையாடி 521 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகளை 23 முறையும் 10 விகெட்டுகளை 4 முறையும் எடுத்து அசத்தியுள்ளார். 2011இல் இல்ங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் நேதன் லயன். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி வருகிறார். சமீபத்தில் 500 விக்கெட்டுகள் எடுத்தபோது ஆஸ்திரேலியாவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார் நேதன் லயன்.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் வீரர் கோர்ட்னி வால்ஷைப் பின்னுக்குத் தள்ளி அதிக டெஸ் விக்கெட் வரிசையில் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர்கள் அனில் கும்ப்ளே 4வது இடத்திலும் ரவி அஸ்வின் 9வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியல்: முத்தையா முரளிதரன் - 800, ஷேன் வார்னே- 708, ஜேம்ஸ் ஆண்டர்சன் - 698. அனில் கும்ப்ளே - 619, ஸ்டூவர்ட் பிராட் - 604, க்ளென் மெக்ரத் - 563, நேதன் லயன் - 521, கோர்ட்னி வால்ஷ் - 519, ரவி அஸ்வின் - 507.
____________________________________________
ஓய்வை அறிவித்தார் எராஸ்மஸ்
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நடுவராக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார்.
3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.61 வயதாகும் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.
____________________________________________
டெல்லி அணிக்கு 2-வது வெற்றி
மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிட்டல்ஸ், யு.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3-வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அபாரமாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 50 ரன்களும், ஆலிஸ் கேப்சி 46 ரன்களும் விளாசினர்.இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, நடப்பு தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2025
10 May 2025 -
எஞ்சிய போட்டிகளை நடத்தி கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு
10 May 2025புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
10 May 2025வாஷிங்டன் : இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
இந்தியா - பாக். மோதலை கைவிட வேண்டும்: சீனா வலியுறுத்தல்
10 May 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் த
-
ஆப்கன் மீது இந்தியா தாக்குதலா? - பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது தலிபான் அரசு
10 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்க
-
வரும் 2030-க்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு
10 May 2025சென்னை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
10 May 2025கிருஷ்ணகிரி : சி.பி.எஸ்.இ.
-
தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக்குழு தகவல்
10 May 2025சென்னை : தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல
-
பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
10 May 2025சென்னை : பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: கண்ணீர் விட்ட பாக். எம்.பி.
10 May 2025பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாக். எம்.பி. கண்ணீர் விட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடலூரில் வரும் 15-ம் தேதி கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 May 2025சென்னை : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.
-
வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்
10 May 2025சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறி
-
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
10 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
-
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்வருக்கு கவர்னர் ரவி பாராட்டு
10 May 2025சென்னை : தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
-
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா?
10 May 2025தர்மசாலா : பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி ஐ.பி.எல். லீக் போட்டி மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி : காஷ்மீர் அரசு அறிவிப்பு
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
-
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
10 May 2025ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட
-
அப்பாவிகளை தாக்கிய பாகிஸ்தான்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
10 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!
10 May 2025சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக ச
-
நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறை
10 May 2025புதுடெல்லி : நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
பாகிஸ்தான் தாக்குதலில் 8 இந்திய வீரர்கள் காயம்
10 May 2025ஜம்மு : ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
-
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
10 May 2025சென்னை, தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இதுவரை 22 போ் பலி
10 May 2025பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்
-
பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி, பாக்கிஸ்தான் ட்ரோன்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
-
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
10 May 2025சென்னை : தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.