முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வருக்கு உள்ளது

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

சேலம் ஜூலை.1 - இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது என சேலம் மாநகர் மாவட்ட  இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் டாக்டர் வைகைச்செல்வன் பேசியுள்ளார். சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை சார்பில் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்குவது, விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு பாசறையை ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறஇத்து ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை 11 மணியளவில் சேலம் போஸ்மைதானத்தில் உள்ள நேரு கலையரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு மாநில பாசறை செயலாளரும், பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர பாசறை செயலாளர் டாக்டர் கே.எஸ்.சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.பாசறை நிர்வாகிகள் கே.சுரேஷ்,டி.கோபிநாத்,ஜி.கீதா,வி.பெரியசாமி,வி.பாலு,ஜி.ஆண்டாள்,மற்றும் எம்.வெங்கடாஜலம்,ஏ.சத்யா,பி.டி.தணிகைவேல் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

சேலம் புறநகர் மாவட்ட செயலாளவும்,நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, கழக அமைப்பு செயலாளர் எஸ்.செம்மலை எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ.,மேயர் எஸ்.சவுண்டப்பன், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஜி.வெங்கடாஜலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் தலைமை வகித்து பேசிய பாசறை மாநில செயலாளரும்,பள்ளிக்கல்வி,விளையாட்டுகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது.இங்கு பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி,செம்மலை எம்.பி.ஆகியோர் நாங்கள் மாணவர் பருவத்தில் இருந்த போது அதிமுகவில் இதுபோன்ற அமைப்புகள் இல்லை. இருப்பினும் நாங்கள் இயக்கத்திற்காக உழைத்தோம் என்றார்கள். உண்மைதான் நமக்குதான் இதுபோன்ற நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.கடந்த சட்டமன்ற தேர்தலிலே பாசறை நிர்வாகிகள் பலருக்கு முதல்வர் தேர்தலில் போட்டியி வாய்ப்பளித்துள்ளார்.பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.தமிழக முதல்வர் ஜெயலலிதா 2 ஆண்டுகளில் 700 ஆண்டுகள் பேசும் சாதனைகளை செய்துள்ளார்.ஆசியாவிலேயே இந்தியாவை வழி நடத்தக்கூடிய சிறப்பான தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் என பிற நாட்டி வாழ்பவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு தமிழக முதல்வர் பல நல்ல திட்டங்களை நாட்டு மக்கள் நலன் கருதி தந்துள்ளார். தமிழகத்தில் பாசறை நிர்வாகிகள் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தெரு,தெருவாக,வீடு,வீடாக சென்று தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.எஸ்.எம்.எஸ்.மூலம் முதல்வரின் சாதனைகளை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். ஒரு பாசறை உறுப்பினர் 3 புதிய உறுப்பினர்களை  அழைத்துவர வேண்டும். அப்படி அழைத்து வந்தால் 3 பிளஸ் 1 கூட்டல் 4 என 2 கோடி பேர் அதில் மட்டுமே இருப்பார்கள் அப்படி இருந்தால் தமிழக முதல்வரின் பலம் டெல்லிக்கு கேட்கும். இந்தியாவை ஆளும் சக்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நாட்டை ஆள வேண்டும் என்றால் பாசறை நிர்வாகிகள் அவர் கூறியுள்ள 3 கட்டளைகளை செயல்படுத்த வேண்டும். 1 முதலில் மாநகரில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்களை 90 நாட்களுக்குள் சேர்க்க வேண்டும்.2 பாசறையில் செயல்படாத நிர்வாகிகள் அல்லது நிர்வாகிகள் வேறு இடங்களுக்கு மாறுதல் ஆகி சென்றிருந்தாலோ அவர்களை எடுத்துவிட்டு துடிப்போடு செயல்படும் பாசறை உறுப்பினர்களை மாநகர செயலாளர் மற்றும் அமைச்சர் ஒப்புதலோடு புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து 15 நாட்களுக்குள் முதல்வரின் கவனத்திற்கு பட்டியல் அனுப்ப வேண்டும்.3 அதிமுகவின் சாதனைகளை வீடு,வீடாக சென்று எடுத்துக் கூறியும், துண்டு பிரசுரங்கள் மூலமும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா 1 அல்ல 2 அல்ல ஓராயிரம் சாதனைகளை செய்துள்ளார். அதையெல்லாம் மக்களிடம் எடுத்து கூறவேண்டும். தற்போது கர்நாடக முதல்வராக உள்ள சித்தராமையாவிடம் பத்திரிக்கை நிருபர்கள் உங்கள் வெற்றிக்கு என்ன? காரணம் என்று கேட்டபோது அவர் நமது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சில திட்டங்களை செயல்படுத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்றார். இதே போல் உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் தமிழக முதல்வரின் ஒப்பற்ற திட்டமான லேப்-டாப் திட்டத்தை மாணவர்களுக்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்தோம் வெற்றி பெற்றோம் என்று சொல்லியுள்ளார்.இப்படி மற்றவர்கள் நமது திட்டத்தை எடுத்து வெற்றி பெறும் அளவிற்கு மக்களுக்கு நல்ல திட்டங்களை தந்து வருகிறார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் 6 பேர் பிரதமர் வேட்பாளர்களாக வட இந்திய பத்திரிக்கைகள் பட்டியலிட்டுள்ளன.1 நரேந்திரமோடி, 2 சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் யாதவ், 3 பீகார் முதல்வர் நிதிஷ்குமார், 4 மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 5, உ.பி.முன்னாள் முதல்வர் மாயாவதி,6 தமிழக முதல்வர் ஜெயலலிதா இவர்களின் நிறை குறைகளையும் அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.மோடிக்கு மக்கள் செல்வாக்கு குஜராத்தில் இருந்தாலும் அவர் மதச்சாயம் உடையவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.2 நிதிஷ்குமார் வட இந்தியாவில் அறிமுகமானவர் ஆனால் தென்னிந்தியாவில் அவருக்கு எந்த அறிமுகமும் இல்லை. 3 மாயாவதி காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கூட எதிர்க்க திராணியில்லாதவர்.4 மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஆட்சி அமைத்த ஒரு வருடத்தில் கம்யூனிஸ்டுகளை சமாளிக்க முடியாமல் பல குழப்பங்களை உண்டு பண்ணியுள்ளார். நம்பகதன்மை இல்லாதவர்.5 முலாயம் சிங் யாதவ் கட்சியோ வன்முறை கட்சி என்ற முத்திரை உள்ளது. 6 வதுதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இவரின் திட்டங்கள் சிறப்பாக உள்ளது.இந்தியாவிற்கு தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்று யாரும் இல்லை. அவர் தொண்டுள்ளமும்,துறவறமும் கொண்டவர் எனவே அவர் இந்தியாவின் பிரதமராக வர தகுதியுள்ளவர் எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசறை நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்ற வேண்டும். ஏனென்றால் வெற்றியை தீர்மானப்பவர்கள் nullநிங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலிலே வெற்றியை தீர்மானத்து போல் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,மாதேஷ்வரன்,ஜெயப்பிரகாஷ்,சண்முகம், கழக பாசறை இணை செயலாளர்கள் ஆர்.ராஜலட்சுமி எம்.எல்.ஏ.,ஆர்.முத்துசாமி,பாசறை துணைச் செயலாளர்கள் பி.ஆர்.மனோகர்,ஜி.பழனிவேல், சி.எம்.விஷ்ணு பிரபு, தேனி மாவட்ட பாசறை செயலாளர் ஓ.பி.இரவீந்திரநாத்குமார், புதுகோட்டை பாசறை செயலாளர் ஆர்.ராஜசேகரன்,தர்மபுரி மாவட்ட பாசறை செயலாளர் சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவிச்சந்திரன்,ஆர்.ஆர்.சேகரன், அவைத் தலைவர் ஏ.கே.எஸ்.எம்.பாலு,பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,எம்.துரைராஜ்,எஸ்.கீதா,இணைச் செயலாளர் டிப்போ ராஜம்மாள், துணை செயலாளர் வி.பன்னீர் செல்வம், மேற்கு தொகுதி செயலாளர் ஆர்.சுந்தரபாண்டியன், வடக்கு தொகுதி செயலாளர் சின்னதிருப்பதி ஆறுமுகம்,மேற்கு தொகுதி இணைச் செயலாளர் ஆர்.ராம்ராஜ்,எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நெத்திமேடு முத்து, மகளிரணி செயலாளர் ஜமுனா ராணி, மாணவரணி செயலாளர் சக்திவேல்,எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் அசோக்குமார்,

இலக்கிய அணி செயலாளர் உரைமுரசு யூசப், அம்மாபேட்டை பகுதி பேரவை செயலாளர் யாதவமூர்த்தி,முன்னாள் மாநகர செயலாளர் பாலகிருஷ்ணன்,கவுன்சிலர்கள் மார்க்கபந்து,புல்லட் ராஜேந்திரன்,கீதா அன்பழகன்,பாமா கண்ணன்,வட்டபாக செயலாளர்கள் மயில் வெங்கடேசன், ஓம் குமார், சூரமங்கலம் பகுதி பாசறை துணை செயலாளர் கிருஷ்ணகுமார், அம்மாபேட்டை பகுதி பாசறை துணை செயலாளர் கே.டி.ராமச்சந்திரன்,சூரமங்கலம் பகுதி பாசறை எம்.சிவானந்த், கொண்டலாம்பட்டி பாசறை துணை செயலாளர் தங்கதாமரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பாசறை பொருளாளர் என்.தினேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago