எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஜூலை.7 - ஈரோட்டில் நேற்று ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் -இளம்பெண்கள் பாசறை கூட்டம் மகாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கே.வி ராலிங்கம் தலைமைதாங்கினார் .ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் -இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே மணிகண்டன் வரவேற்றார் .கூட்டத்தில் கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
அறிஞர் அண்ணாவுக்கு பின் னால் மாணவர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. அண்ணாவுக்கு பின் மனித நேயம் மிக்க தலைவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் விளங்கினார். அவர் ஆட்சியில் இருந்த 14ஆண்டுகள் தி.மு.கவால் எதையும் சாதிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பின் அ.தி.மு.க விற்கு புத்துயிர் கொடுத்தவர் புரட்சி தலைவி முதல்வர் அம்மா தான். அம்மா சோதனைகளையும், வேதனைகளையும் தகர்த்தெறிந்து 3 - வது முறையாக ஆட்சிக்கு வந்தார் . அம்மா பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல் படுத்தி வருகிறார். மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக அ.தி.மு.க உள்ளது. பாசறை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மக்களிடம் எளிமையாக பணியாற்ற வேண்டும்.பதவியை எதிர்பார்க்கமால் நீங்கள்கட்சி பணியாற்றவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் புதியதாக 25 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அம்மா 2 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்டு சாதனைகளை புரிந்துள்ளார். அரசின் நாடித்துடிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்,விவசாயிகள் உள்ளனர். இன்று மாணவ-மாணவிகள் மனது லேப் டாப் கொடுத்த அம்மா பெயரை தான் உச்சரித்துகொண்டிருக்கின்றது. அவர்களுக்கு அம்மா கொடுத்துவரும் உதவிகள் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது. கல்விக்கு 17 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதல்வர் புரட்சி தலைவி அம்மாதான். தமிழர் நலன் ,தமிழர் நலன் என்று கூறிவருபர்கள் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அம்மா ரூ 100 கோடி செலவில் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க உத்திரவிட்டு தமிழர்கள் மனதில் தாயாக விளங்குகின்றார்.பத்திரிக்கைகளில் நரேந்திர மோடி,முலாயம்சிங்யாதவ்,மம்தா, மாயவதி, நிதிஷ்குமார் ,ஜெயலலிதா ஆகியோரில் ஒருவர் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறுகின்றன. இதில் நரேந்திர மோடியை வட நாட்டு மக்கள்தான் ஏற்றுகொள்வர்கள். மம்தாவுக்கு தன் மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளை சாமாளிக்க முடியவில்லை. மாயவதி அன்னிய வர்த்தகத்தை எதிர்க்காததால் மக்களால் தூக்கி எரியபட்டுவிட்டார்.நிதிஷ்குமார் வட மாநில மக்களுக்கு மட்டுதான் அறிமுகம் ஆனாவர்.தென் நாட்டு மக்களுக்கு அவரை தெரியாது. ஆனால் புரட்சி தலை அம்மா தான் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். அவர்தான் இந்தியாவை ஆளும் தகுதி படைத்தவர் . அம்மா அறிவித்த ஒரிருதிட்டங்களை அறிவித்து அதன் முலம் பக்கத்து மாநில முதல்வர்கள் வெற்றி ஆட்சி அமைக்கும் போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் அம்மா ஏன் பிரதமராக வரக்ககூடாது ?இந்தியாவின் பிரதமர் பதவியை முடிவு செய்பவர்கள் தமிழர்கள்தான் .இப்போது ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றும் அம்மா வரும்ஆண்டுகளில் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் அதற்கு நாம் பாடுபடவேண்டும்.குடும்ப பாசத்திற்கு அப்பாற்பட்டவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவரை போலவே அம்மாவும் தியாக உள்ளம்கொண்டவர். ஏழை ,எளிய 66 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி ஒப்பற்ற தலைவியாக அம்மா விளக்கி வருகின்றார். இப்படி பட்ட தலைவியை தான் நாம் பிரதமர்ஆக்க வேண்டும் இவ்வாறு கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் பேசினார் .தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; 16-03-2013 -ஐ இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை தினமாக அறிவித்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது, அம்மாவின் இரண்டு ஆண்டு சாதனைகளை வீடு,வீடாக சென்று பிரசுரங்களை வழங்குவது, மாவட்டம் முழுவதும் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ந்துவது, நாற்பதும் நமதே நாளைய பிரதமர் அம்மா என்கிற தாரக மத்திரத்தோடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை ,இளம்பெண்கள் பாசறை தீவிரமாக பணியாற்றுவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை வெற்றி கரமாக நடத்தி முடித்த முதல்வர் அம்மாவுக்கு நற்றி தெரிவிப்பது, ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் தமிழகத்தில உள்ள 10 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகத்தை ஆரம்பித்தமைக்கும்,மலிவு விலை காய்கறி வழங்கும் திட்டத்தை அறிவித்தமைக்கும், மினரல் வாட்டர் ரூ 10க்கு அரசு பேருந்து, மற்றும் பேருந்து நிலையங்களிலும் கிடைக்க செய்தமைக்கும் முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது, தொழிலாளர் நலன் காக்கும் அம்மாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்கு களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டிப்பது, கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளராக, தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் அவர்களை நியமனம் செய்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில செயலாளர் ராஜலட்சுமி,எம்.எல்.ஏக்கள் கிட்டுசாமி, பொன்னுசாமி,என்.எஸ்.என் நடராஜன் மேயர் மல்லிகா பரமசிவம்,துணை மேயர் கே.சி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


