முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியீடு

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      உலகம்
England-Charles-money-2024-

லண்டன், மன்னர் சார்லஸ் படத்துடன் இங்கிலாந்து பணம் வெளியிடப்பட்டுள்ளது. இது வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டு வெளியாகும் என இங்கிலாந்து வங்கி அறிவித்தது. 

இந்த நிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லசிடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார். 

இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பணநோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து