முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்

புதன்கிழமை, 15 மே 2024      உலகம்
Pak 2024-05-15

Source: provided

வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் வசித்து வருபவர் தரார். பாகிஸ்தானில் பிறந்த இவர், 1990-ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்றார். அந்நாட்டின் முக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பிலும் உள்ளார். 

குடியரசு கட்சியில் இருக்கும் அவர், டிரம்ப்பின் ஆதரவாளர். தொண்டு நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகவும் உள்ள இவர், பால்டிமோர் சட்டப் பல்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் கூறியதாவது: 

மோடி வலிமையான தலைவர். இந்தியாவை புது உச்சத்துக்கு கொண்டு சென்றார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக பதவி ஏற்பார். மோடியால், இந்தியா மட்டுமல்ல, ஆசிய பிராந்தியமும், உலகமும் பலன்பெறும். 

மோடி முக்கியமான தலைவர். அவர் இயற்கையாக பிறந்த தலைவர். கடினமான சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு வந்த இந்திய பிரதமர்களில் மோடி ஒருவர். பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகம் மற்றும் பேச்சுவார்த்தையை மோடி துவக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அமைதியான பாகிஸ்தான் என்பது, இந்தியாவுக்கும் நலம் பயக்கும். மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்பது அனைத்து இடங்களிலும் எழுதி வைக்கப்பட்டு உள்ளது. 97 கோடி இந்திய மக்கள், தங்களது வாக்குரிமையை பயன்படுத்தி உள்ளது பெரிய அதிசயம்.

உலகளவில் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம். 2024-ம் ஆண்டிலும் மோடியின் செல்வாக்கு இந்தியாவில் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. வருங்காலத்தில், இந்திய ஜனநாயகத்தில் இருந்து மக்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள். மோடியைப் போன்று, பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து