முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு

புதன்கிழமை, 15 மே 2024      தமிழகம்
Nly Cong 2024-05-04

Source: provided

நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் (60), கடந்த 4-ம் தேதி காலை திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள அவரது வீட்டின் பின்புற தோட்டத்தில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். 

இது தொடர்பாக 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. போலீசாருக்கு கிடைத்த சி.சி.டி.வி. காட்சிகள், செல்போன் விவரங்கள், ஜெயக்குமாரின் ஒரு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவரது உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரை மற்றும் பெங்களூருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஷ்குமார் தலைமையிலான தனிப்படையினர் திசையன்விளை, உவரி, குட்டம், ஆனைகுடி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக ஜெயக்குமார் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கின் போக்கு மற்றும் விசாரணை குறித்து தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவால் மற்றும் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து