முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித்ஷா சீரியஸான பேச்சு

புதன்கிழமை, 12 ஜூன் 2024      இந்தியா
Tamilsai 2024-05-12

Source: provided

விஜயவாடா :  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசையிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா சீரியஸாக பேசும் வீடியோ வைரலாகியுள்ளது. 

உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாராளுமன்ர தேர்தலில்   பா.ஜ.க. தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில்,  சில தொகுதிகளில்  2-வது இடத்தை பா.ஜ.க. பிடித்திருந்தது. இதனை வரவேற்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. வின் ஓட்டு சதவீதம் அதிகரித்ததாகவும்,  பா.ஜ.க.  நல்ல நிலையில் இருப்பதாகவும் கூறியிருந்தார். 

அதேநேரத்தில், தேர்தலில் போட்டியிடுவதற்காக புதுச்சேரி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க. வில் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க.வுடன் போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கலாம். 

நாங்கள் ஒரு வியூகம் அமைத்திருந்தோம். கூட்டணி வைப்பதால் மோசம் போய் விட மாட்டோம். ஆனால், அண்ணாமலைக்கு எங்கள் வியூகத்தில் விருப்பம் இல்லை என அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷாவை சந்தித்து, வணக்கம் கூறிய தமிழிசையை அருகில் அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.க. வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து