முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீர் விடுவிக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும்: டெல்லி அமைச்சர் அதிஷி உறுதி

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      இந்தியா
Adishi 2023-11-05

புதுடெல்லி, டெல்லியின் பங்கு தண்ணீரை அரியாணா அரசு விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியின் பங்கு தண்ணீரை அரியாணா அரசு விடுவிக்க மறுத்துள்ள நிலையில் தலைநகரில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், தனக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்து என் எடை குறைந்துள்ளது. இது நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். என் உடல் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை அரியாணா அரசு தண்ணீர் திறக்கும் வரை உண்ணாவிரதத்தைத் தொடருவேன் என்றார்.

டெல்லி அமைச்சர் ஞாயிறன்று மருத்துவர்களால் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறினார். கடந்த மூன்று வாரங்களாக யமுனை நீரில் டெல்லியின் பங்கை அரியணா ஒரு நாளைக்கு 100 மில்லியன் கேலன் (எம்ஜிடி) குறைத்துள்ளது. இதனால் டெல்லியில் 28 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, ஆம் ஆத்மிக் குழுவுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு அரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி, கூடுதல் தண்ணீர் வழங்க முடியுமா என்பதைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து