முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம்: ராகுல் காந்தியை சந்தித்த பிறகு விவசாயிகள் பேட்டி

புதன்கிழமை, 24 ஜூலை 2024      இந்தியா
Rahul 2024 07 24

Source: provided

புதுடெல்லி : டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம் என்று நேற்று ராகுல் காந்தியை சந்தித்த பிறகு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் உள்ள பாராளுமன்ற இல்ல வளாகத்தில், தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஒரு குழுவாக சென்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேற்று நேரில் சந்தித்து பேசினர். இந்த குழுவில் விவசாய தலைவர்கள் 12 பேர் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், முன்னாள் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோன்று அக்கட்சியின் பிற தலைவர்களான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, குர்ஜித் சிங் ஆஜ்லா, தரம்வீர் காந்தி, அமர் சிங், தீபேந்தர் சிங் ஹூடா மற்றும் ஜெய் பிரகாஷ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில், தங்களுடைய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை பற்றி அவர்கள் ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தனர். இந்த சந்திப்புக்கு முன் பாராளுமன்ற இல்ல வளாகத்திற்குள் நுழைய விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதுபற்றி ராகுல் காந்தி கூறும்போது, விவசாயிகளை உள்ளே வரும்படி நாங்கள் அழைத்தோம். ஆனால், அவர்களை உள்ளே வரவிடவில்லை. அவர்கள் விவசாயிகள். அதனால், அப்படி நடந்திருக்கலாம். இதற்கான காரணம் பற்றி நீங்கள் பிரதமரிடமே கேட்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், விவசாயிகளில் ஒருவரான ஜெகஜித் சிங் தல்லேவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து மத்திய அரசு தவறி விட்டது. சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டியது கட்டாயம். நாங்கள் டெல்லி நோக்கிய பேரணியை தொடருவோம் என்று கூறினார்.

இந்த சந்திப்பில், அவர்களின் நீண்டகால கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) திருத்தியமைக்க வேண்டும் என கோரி வரும் அவர்கள், அதற்காக ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டுமென்று ராகுல் காந்தியை கேட்டு கொண்டனர். சுவாமிநாதன் ஆணையத்தின் அடிப்படையில், பயிர் விலை சரிவை சந்திப்பதில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க, கொள்முதல் உத்தரவாதம் ஒன்றை அரசு வழங்க வேண்டும் என்றும் இதற்காக, எம்.எஸ்.பி.யை கொண்டு வரவேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள விவசாய அமைப்புகள் விருப்பம் தெரிவித்து உள்ளன. இந்த நிலையில், ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து