முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

களைகட்டிய ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: தமிழகத்தில் நீர்நிலைகளில் வழிபாடு நடத்திய பொதுமக்கள்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Adi 2024 08 03

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களைகட்டியது.  காவிரி, கொள்ளிடம் உள்பட தமிழகத்தில் உள்ள ஆறுகள், நீர்நிலை பகுதிகளில்  பொதுமக்கள் கூடி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

தமிழ் மாதங்களில் ஆடி சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18-ம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.  ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.

இதையடுத்து ஆடிப்பெருக்கு வழிபாடு செய்வதற்காக காவிரி, கொள்ளிடம் உள்பட தமிழகத்தில் உள்ள ஆறுகள், நீர்நிலை பகுதிகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் கூடி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.

பெண்கள் ஒன்று கூடி ஆற்றங்கரையில் வாழை இலையில் அரிசி, பழங்கள், பனைஓலை கருகமணி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து படையலிட்டனர். இதன் பின்னர் மஞ்சள் கயிற்றை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.  

புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிய மாங்கல்ய கயிறை அணிந்து கொண்டனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை, கொள்ளிடம் ஆறு கரைகள், ஈரோடு பவானி கூடுதுறை ஏராளமனோர் கூடி வழிபாடு நடத்தினர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வருகை புரிந்த நிலையில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆடிப்பெருக்கு  கொண்டாட்டம் நடைபெறும் இடங்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து