எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் ஆன்லைனில் நேற்று (ஆக.7) வெளியிடப்பட்டுள்ளது. 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்து சாதனைப் படைத்துள்ளனர். விழுப்புரம் மாணவி ஜி.திவ்யா முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீராபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) மற்றும் ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 - 25-ம் ஆண்டு கலந்தாய்வுக்கு https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 3-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி 28-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பிடெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தகுதியான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளங்களில் நேற்று வெளியிடப்பட்டது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 15 மாணவர்கள் 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்றுள்ளனர். அதில், வயது அடிப்படையில் (சீனியருக்கு முன்னுரிமை) முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி வி.அபிஸ்ரீ, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கே.எம்.சூர்யா, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.அஸ்விதா, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.நவினா ஆகிய 5 மாணவ- மாணவியர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். இதில், ஜி.திவ்யா, கே.அஸ்விதா, ஆர்.நவினா ஆகிய மூவரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜி.திவ்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பி.துர்காதேவி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.அபிநயா, திருவண்ணாமலை மாவட்டடத்தைச் சேர்ந்த மாணவர் ஆர்.மனோஜ் கார்த்திக், தருமபுரி மாவட்டத்தைச் மாணவி எஸ்.சற்குணபிரியா ஆகியோர் கட்-ஆப் மதிப்பெண் 199.500 பெற்று அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளனர்.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 199.500 பெற்று தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பி.அசோக்பிரியன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.ராகவி (மதிப்பெண் 199), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் எஸ்.உதயகுமார் (மதிப்பெண் 198.500), தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கே.பாலாஜி (மதிப்பெண் 198.500), ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் வி.ஹரிராஜ் (மதிப்பெண் 198) ஆகியோர் அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர்.
அதேபோல், பிடெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கட்-ஆப் மதிப்பெண் 196.500 பெற்று கள்ளகுறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.கனிமொழி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.நந்தா (மதிப்பெண் 193), அதே மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.ராகவி (மதிப்பெண் 191), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.ஜனத்நிஷா (மதிப்பெண் 189.500), நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.சந்தியா (மதிப்பெண் 189) ஆகியோர் அடுத்த 4 இடங்களை பெற்றுள்ளனர். பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044-29997348, 29997349 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர்: த.வெ.க. நிர்வாகி அருண் ராஜ் பேட்டி
21 Dec 2025கோவை, விஜய் இப்போது நடிகர் அல்ல என்றும் நடிகர் விஜய்யை விட அரசியல் விஜய் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் த.வெ.க.
-
நீலகிரி மாவட்டத்தில் இன்று உறைபனி ஏற்பட வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னனை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று உறைபனி ஏற
-
தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
21 Dec 2025நெல்லை, தமிழர்களின் வரலாற்றை விட்டுக்கொடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
நெல்லை மாவட்டத்தில் 15 புதிய பேருந்துகளின் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டத்திற்கு 15 புதிய பேருந்து போக்குவரத்து சேவையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-12-2025.
21 Dec 2025 -
பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார்: செந்தில்பாலாஜி தகவல்
21 Dec 2025கோவை, பொங்கல் பரிசுத்தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தற்போது வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தகவல்
21 Dec 2025புதுச்சேரி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதுவரை தொடர்கிறோம் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. சார்பில் இன்று விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
21 Dec 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று (திங்கள்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறத
-
தி.மு.க. கூட்டணியில் தொடர காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்
21 Dec 2025மதுரை, பதவி ஆசை இல்லாததே தி.மு.க. கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.
-
செவிலியர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
21 Dec 2025சென்னை, செவிலியர்களின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பூமியின் சுழற்சியிலிருந்து மின்சாரம் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகள்..!
21 Dec 2025நியூயார்க், பூமியின் சுழற்சி, காந்தப்புலத்தைப் பயன்படுத்தி எரிபொருள் இன்றி மின்சாரம் தயாரிக்கும் சிறிய கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி
21 Dec 2025கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்தனர்.
-
உக்ரைன் போர் முடிவுக்கு வருமா...? அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை
21 Dec 2025வாஷிங்டன், உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 396வது நாளாக போர் நீடித்த நிலையில், போரை நிறுத்த அமெரிக்கா - ரஷ்யா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
நெல்லைக்கு 3 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
21 Dec 2025நெல்லை, ரூ.16 கோடி செலவில், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளி
-
கிழக்கு சீன கடல் பகுதியில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிமம் கண்டுபிடிப்பு
21 Dec 2025பெய்ஜிங், கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது.
-
கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
21 Dec 2025நெல்லை, தமிழக நாகரிகத்தின் தொன்மை குறித்து கீழடி, பொருநை அருங்காட்சியங்களை பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
அரியானாவில் நிலநடுக்கம்
21 Dec 2025சண்டிகர், அரியானாவில் உள்ள ரோஹ்தக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரலாற்றை படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
21 Dec 2025நெல்லை, வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Dec 2025நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அமையவுள்ள காயிதே மில்லத் புதிய நூலகத்திற்கு நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு டிச. 29-ல் பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்
21 Dec 2025சென்னை, வரும் டிச. 29-ல் நடைபெறவுள்ள பா.ம.க. சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்துக்கு அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு காந்தியின் பெயர் சூட்டினார் மம்தா
21 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தில் மாநில வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தியின் பெயர் அம்மாநில முதல்வர் மம்தா பானார்ஜி சூட்டியுள்ளார்.
-
2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பல்வேறு திட்டங்கள் மத்திய நிதி அமைச்சர் அறிவிப்பு
21 Dec 2025பெங்களூரு, 2047ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான துணைத் திட்டங்களை வகுக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித
-
17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: போராட்டத்துக்கு இம்ரான்கான் அழைப்பு
21 Dec 2025லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
-
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு
21 Dec 2025சென்னை, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி
21 Dec 2025நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



