எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முக்கியமானதில் ஒன்று துலீப் டிராபி. இந்தத் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இந்த போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நடத்துகிறது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக துலீப் டிராபி இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சர்வதேச வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு உள்நாட்டு போட்டியில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சுப்மன் கில், ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகிறது.
_____________________________________________________________________
வைரலாகும் நீரஜ் - பாக்கர் விடியோ
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், மனு பாக்கர் இரு வெண்கலப் பதக்கங்களையும் வென்றிருந்தனர். 2024 ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர், 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
ஒலிம்பிக் போட்டிகளை முடித்துக்கொண்டு வீரர்கள் இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பு, பாரீஸில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்துக்கொண்டனர். அப்போது நீரஜ் சோப்ரா, மனு பாக்கரையும் அவரின் தாயாரையும் சந்தித்துப் பேசினார். அவர்கள் பேசிக்கொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் இருவரும் பேசிக்கொள்ளும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், வெட்கத்துடன் பேசுவதைப் போன்று உள்ளது. இந்த விடியோவைப் பகிர்ந்தவர்களும் இதனைக் குறிப்பிட்டு, எதிர்கால விளையாட்டுத் துறை தம்பதிகள் - இந்தியாவில் எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரிடம் பேசும்போது இவ்வாறு இருப்பது இயல்பு - என்பன போன்ற கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
_____________
ரோகித், கோலி குறித்து ஹர்பஜன் சிங்
இந்திய அணிக்காக ரோகித் சர்மா இன்னும் இரண்டு ஆண்டுகளும், விராட் கோலி 5 ஆண்டுகளும் விளையாடுவார்கள் என நம்புவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் ரோகித் சர்மா தாரளமாக விளையாடலாம்.
விராட் கோலி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக விளையாடலாம். விராட் கோலி மிகுந்த உடல் உறுதியுடன் இருக்கிறார். அணியில் உள்ளவர்களிலேயே விராட் கோலிதான் மிகுந்த உடல் உறுதியுடன் இருப்பவர் என நினைக்கிறேன். 19 வயது இளைஞரைக் கூட விராட் கோலி உடல் உறுதியில் தோற்கடித்து விடுவார். அந்த அளவுக்கு அவர் உறுதியாக இருக்கிறார் என்றார்.
_____________________________________________________________________
நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது. நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியிலும், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன்பின், இலங்கைக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் முறையே செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 26 ஆகிய தேதிகளில் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 12) அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம்., டிம் சௌதி (கேப்டன்), டாம் பிளண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மாட் ஹென்றி, டாம் லாதம் (துணைக் கேப்டன்), டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க்கி, அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.
_____________________________________________________________________
நதீமுக்கு எருமை மாடு பரிசு
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார். இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார். மேலும் அவரது சொந்த ஊரான கானேவாலில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் தெரிவித்தார். இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு அவரது மாமனார் முகமது நவாஸ் எருமை மாட்டை பரிசாக வழங்கினார். அவர்களின் ஊரில் எருமை மாடு என்பது மதிப்பு மற்றும் கௌரவமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. 'மாபெரும் வெற்றி பெற்ற பிறகும் நதீம் தனது கிராமம் மற்றும் அவர் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்கிறார்' என அவரது மாமனார் பெருமிதமாக தெரிவித்தார். நவாஸின் மகளான ஆயீஷாவை தான் நதீம் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
_____________________________________________________________________
புதிய கார் வாங்கிய முகமது சிராஜ்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.
அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார். புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சர்வதேச அளவில் ஒரே நாளில் தங்கம் -வெள்ளி விலை வீழ்ச்சி
22 Oct 2025மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
-
பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம்
22 Oct 2025திருவனந்தபுரம், 4 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரளா வந்துள்ள ஜனாதிபதி திரெளபதி முர்மு பம்பையில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
22 Oct 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
-
லோக்பால் உறுப்பினர்களுக்கு ரூ. 5 கோடியில் சொகுசு கார்கள் வாங்க டெண்டர்
22 Oct 2025மும்பை : ஊழலை ஒழிக்கும் லோக்பால் உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வாங்கி கொடுப்பதா என சரத்பவார் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
22 Oct 2025சென்னை : வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக கரையை கடக்கும் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
22 Oct 2025சென்னை, வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறாது என்றும் இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே வடதமிழ்நாடு – புத
-
ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கு மேல் சரிந்த தங்கம் விலை
22 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையான ந
-
புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையால் புழல் ஏரியில் நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
உங்களது உழைப்பு ஆச்சரியப்படுத்துகிறது: மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி
22 Oct 2025சென்னை : உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-10-2025.
22 Oct 2025 -
கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
22 Oct 2025திருவாரூர் : கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
-
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு
22 Oct 2025சென்னை : சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட 1.47 லட்சம் பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
-
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறப்பு
22 Oct 2025சென்னை : அடையாறு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
தங்க நகைகளை வீட்டில் எவ்வளவு வைக்கலாம்..? வெளியானது புதிய தகவல்கள்
22 Oct 2025புதுடெல்லி, வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் வைத்திருக்கலாம் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா? - அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் மோதல்
22 Oct 2025அடிலெய்டு : ஆஸி.,க்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்யுமா?
-
காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று புயலாக மாற வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம் தகவல்
22 Oct 2025சென்னை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாகவோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ மாற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
22 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கரூர் கூட்டநெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்
22 Oct 2025கரூர் : கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவ 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
நெல் மூட்டைகள் தேங்க மத்திய அரசே காரணம்: அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
22 Oct 2025தஞ்சாவூர், விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல்
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
22 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி: அமைச்சர் ஆறுதல்
22 Oct 2025கடலூர் : கடலூர் அடுத்த ஆண்டார் முள்ளி பள்ளத்தை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி அசோதை. இவர்களது மகள் ஜெயா.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் திடீர் பரபரப்பு
22 Oct 2025பத்தனம்திட்டா : ஜனாதிபதி பயணித்த ஹெலிகாப்டரின் சக்கரங்கள் கான்கிரீட் தளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சோனி, எக்கோ ரெக்கார்டிங் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா ஐகோர்ட்டில் மனு
22 Oct 2025சென்னை : சோனி மியூசிக் நிறுவனம், எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பிரபல இசையமைப்பாள
-
திருச்சி காவிரி - கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
22 Oct 2025திருச்சி : காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 Oct 2025சென்னை : அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்காமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.