முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘வேட்டையன்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு: சென்சார் போர்டு பதிலளிக்க உத்தரவு

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      சினிமா
Vettaiyan

மதுரை, என்கவுன்டருக்கு ஆதரவான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால், நடிகர் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

மதுரை உலகநேரியைச் சேர்ந்த பழனிவேலு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த, ‘வேட்டையன்’ படத்துக்கான டீசர் கடந்த செப்டம்பர் 20-ல் வெளியானது. அதில் சட்டவிரோத என்கவுன்டரை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கை உருவாக்கும் வகையிலான வசனம் இடம்பெற்றுள்ளது. இதனை நீக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே ‘வேட்டையன்’ படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்டர் தொடர்பான வசனங்களை நீக்கவோ அல்லது மியூட் செய்யவோ உத்தரவிட வேண்டும். அதுவரை ‘வேட்டையன்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘வேட்டையன்’ படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்து, மனு குறித்து மத்திய சென்சார் போர்டு மற்றும் லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து