முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையின் கனமழையால் தீபாவளி வர்த்தகம் பாதிப்பு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்த நிலையில் தீபாவளி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் கனமழை பெய்தது. எழும்பூர், நுங்கம்பக்கம், கோடம்பாக்கம், தி.நகர், கிண்டி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, வேளச்சேரி, குரோம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், கனமழையால் தீபாவளி வர்த்தகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு, துணி, பூக்கள், காய்கறி, இனிப்பு வகைகள் உள்படவற்றின் வியாபாரம் நேற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

தி.நகரில் உள்ள கடைகளில் பட்டாசு, இனிப்புகள், புதுத்துணி உள்பட பல்வேறு பொருட்களை வாங்க மாலை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கனமழையால் பொருட்களை வாங்க வரும் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. கனமழையால் தி.நகரில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. கனமழையால் தீபாவளி விற்பனை மந்தமாக நடைபெறுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து