முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனின் முடிவெடுக்கும் மையங்களை குறிவைத்து தாக்குவோம்: புடின் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      உலகம்
Putin 2024-11-29

Source: provided

 

மாஸ்கோ: அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை ரஷ்யா மீது ஏவும், உக்ரைனின் முடிவெடுக்கும் மையங்கள் குறிவைத்து தாக்கப்படும்  என்று ரஷ்ய அதிபர்  புடின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் மாஸ்கோ மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் மீது, உக்ரைன் படைகள் மிகப் பெரிய டிரோன் தாக்குதல்களை சமீபத்தில் நடத்தின. இந்நிலையில், ஆஸ்தானா என்ற இடத்தில் நடந்த ராணுவம் தொடர்பான மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் பேசியதாவது:  

நேட்டோ நாடுகள் ஒட்டுமொத்தமாக தயாரிக்கும் ஏவுகணையின் எண்ணிக்கையை விட, 10 மடங்கு அதிக அளவிலான ஏவுகணைகளை ரஷ்யா தயாரிக்கிறது. தேவையில்லாமல் எங்களிடம் வாலாட்டினால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அமெரிக்கா, பிரிட்டன் தயாரிப்பு ஏவுகணைகளை உக்ரைன் எங்கள் மீது ஏவினால், ஓரேஷ்னிக் ஏவுகணையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். இதை, உலகின் வேறு எந்த நாட்டின் ஏவுகணையுடனும் ஒப்பிட முடியாது.

இது போன்ற ஏவுகணையை மேற்கத்திய நாடுகள் தயாரிப்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லாதது. எங்கள் மீது தாக்குதலை தொடர்ந்தால், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள, போர் தொடர்பான முடிவுகளை எடுக்கும் மையங்களை குறிவைத்து ஓரேஷ்னிக் ஏவுகணைகளை ஏவுவோம்.  இவ்வாறு அவர் பேசினார். 

இந்த ஓரேஷ்னிக் ஏவுகணை, அணு ஆயுதத்துக்கு நிகரானதாக கூறப்படுகிறது. இதை தான், உக்ரைனின் நிப்ரோவில் சோதனை முறையில் ரஷ்யா சமீபத்தில் ஏவியதாக கூறப்படுகிறது. இது, 5,500 கி.மீ., வரை சென்று தாக்கும் திறன் உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து