முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கரோனா பெருந்தொற்றுக்கு அடுத்ததாக சீனாவிலிருந்து குழந்தைகளைத் தாக்கக் கூடிய  எச்.எம்.பி.வி தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் வி.ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையில், பெண் குழந்தை காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்னைகளால் சில நாள்களுக்கு முன்பு ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், குழந்தையின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. 

இதையடுத்து சிறுமிக்கு  எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  முன்னதாக புதுச்சேரியில் கடந்த வாரம் முதல்  எச்.எம்.பி.வி தொற்று ஐந்து வயது சிறுமிக்குப் பதிவானதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமி பூரண குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினார். புதுச்சேரி நிர்வாகம் வைரஸின் சூழலில் அனைத்து நடவடிக்கைகளையும் தயார் செய்துள்ளது என்று இயக்குநர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து