முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் சோக சம்பவம்: 5 கோடி ரூபாய் கடன் தொல்லையால் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
Balamurugan-2025-03-13

சென்னை, சென்னை அண்ணாநகரில்  மருத்துவர் அவரது மனைவி மற்றும்   2 மகன்கள்  மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன் ( வயது53). இவர் சென்னையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார்.  தொழில் நிமித்தமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியேறினார். இவரது மனைவி சுமதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.  இந்த தம்பதியின் மூத்த மகன் ஜஸ்வந்த் குமார் (19). பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். மற்றொரு மகன் லிங்கேஷ்குமார்( 17 ) தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்த நிலையில் வீட்டு வேலைக்கார பெண்மணி ரேவதி,   நேற்று (மார்ச் 13) காலை மருத்துவர் பாலமுருகனின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ரேவதி, டாக்டரின் டிரைவர் விஜய், மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஜெயராமன் மூன்று பேரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது  சுமதியும் ஜஸ்வந்த் குமாரும் ஒரு அறையிலும், பாலமுருகன் மற்றொரு அறையிலும், சிறிய மகன் லிங்கேஷ்குமார் பூஜை அறையிலும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்கேன் சென்டர் தொழிலை விரிவாக்க 5 கோடி ரூபாய் வரை வங்கிகளில் பாலமுருகன் கடன் பெற்றிருந்ததாகவும், இதற்காக, மாதம் 6 லட்சம் ரூபாய் வரை இ .எம்.ஐ . செலுத்தி வந்ததும் தெரிய வந்ததுள்ளது.  ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்கேன் சென்டர் தொழில் நடக்கவில்லை. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்த பாலமுருகன்,  இரவு உணவுக்குப் பின், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவர் பாலமுருகனை பார்க்க, அவரது வீட்டுக்கு பலர் வந்து போவதுண்டு. அந்த வகையில் கடன் கொடுத்தவர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்து மிரட்டி விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து