எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும் என்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுப் பேசினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள தலைவர்கள் அதற்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டுகிறேன். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்பதை ஏற்க முடியாது. அவ்வாறு நடந்தால் தமிழகம் 8 முதல் 12 இடங்களை இழக்கும். எண்ணிக்கை தான் அதிகாரம். ஒருவேளை நமக்கான தொகுதிகளை நாம் இழந்தால் சொந்த நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக இருக்க நேரிடும்.
பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. அப்படியிருக்க மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாகும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி அமைப்புக்கு சோதனை வந்துள்ளது. மேலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை கடுமையாக பாதிக்கும். காலம் காலமாக பாதுகாக்கப்படும் நமது சமூக நீதி பாதிக்கப்படும். அதனைத் தடுக்க இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம்.
இவ்விவகாரத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் தெளிவாக இல்லை. குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அதனாலேயே முன் எப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழகம் ஒன்றிணைந்துள்ளது. இதே ஒற்றுமையுடன் இந்த அரங்கில் கூடியுள்ள அனைவரும் செயல்பட வேண்டும். மணிப்பூர் மாநிலம் கடந்த 2 ஆண்டுகளாக பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது என்பது நம்முடைய அரசியல் வலிமை குறைப்பு என்று பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்த முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை வரவேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாள் இது. இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்படும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.