எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி பாராட்டுதல்களைத் தெரிவித்தார். உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றுப் போட்டிகள் லாகூரில் நடைபெற்ற போது பாகிஸ்தான் மகளிர் அணி தகுதிச்சுற்றில் 5 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மகளிர் அணி அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மே.இ.தீவுகள், தாய்லாந்து, வங்கதேச அணிகளை வென்று ஐ.சி.சி. உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________________________________
ஆட்ட நாயகன் விருது? கோலி கேள்வி
ஐ.பி.எல். தொடரில் முல்லான்பூரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 73 ரன்களும், படிக்கல் 61 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது படிக்கலுக்கு செல்ல வேண்டும் என்று விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- உண்மையிலேயே இந்த வெற்றியின் மூலம் கிடைத்துள்ள இரண்டு புள்ளிகள் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே என்னை பொறுத்தவரை இந்த ஆட்டநாயகன் விருது அவருக்கு தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதை ஏன் எனக்கு கொடுத்தார்கள்? என்று தெரியவில்லை. என்று விராட் கோலி கூறினார்.
______________________________________________________________________________________________________
லிவிங்ஸ்டன் குறித்து சேவாக்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பல வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் முன்னணி ஆல்ரவுண்டர்களான பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) மற்றும் பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ள லியாம் லிவிங்ஸ்டன் (இங்கிலாந்து) ஆகியோர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். .
இந்நிலையில் இது குறித்து பேசிய வீரேந்திர சேவாக் கூறுகையில், "மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனிடம் வெற்றிக்கான பசி நீங்கிவிட்டது போல் உணர்கிறேன். அவர்கள் இங்கே (இந்தியா) விடுமுறையை கழிக்க வருகிறார்கள். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கை பார்க்கிறார்கள், வெளியேறுகிறார்கள். அணியின் வெற்றிக்காக போராடுவதற்கான விருப்பம் அவர்களிடம் தெரியவில்லை. தங்களுடைய அணிக்காக வெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை" என்று கூறினார்.
______________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. அணி குறித்து ஸ்ரீகாந்த்
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான சென்னை இம்முறை பேட்டிங்கில் தடுமாறுவதே இந்த மோசமான செயல்பாடுகளுக்கு காரணம். பேட்ஸ்மேன்கள் ஒருவரு கூட அதிரடியாக ஆடி ரன்கள் குவிக்காதது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, சி.எஸ்.கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் பந்தை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்க விட்டதைப் பார்த்தது விருந்தாக அமைந்தது. மீதமுள்ள ஆட்டங்களுக்காக சி.எஸ்.கே அணிக்கு என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி விளையாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
தங்கம் விலை உயர்வு
05 May 2025சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்
05 May 2025சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.
-
எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நூலுரிமை தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 May 2025சென்னை, கவிக்கோ அப்துல்ரகுமான் உள்பட 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையை எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு சென்ன
-
நீட் தேர்வில் சர்ச்சை கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்
05 May 2025சென்னை: நீட் தேர்வில் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
ரெட்ரோ விமர்சனம்
05 May 2025வெளிநாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செயல்களை செய்யும் ஜோஜு ஜார்ஜால் வளர்க்கப்படும் தாய், தந்தை இல்லாத சூர்யா, தனது காதலி பூஜா ஹெக்டேவுக்காக அடிதடியை விட்டுவிட்டு அமைதி
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
05 May 2025சென்னை: கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சிவகிரி வயதான தம்பதி படுகொலை: சி.சி.டி.வி காட்சிகளை திரட்ட காவல்நிலையங்களுக்கு உத்தரவு
05 May 2025ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
05 May 2025சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
-
போதிய ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
05 May 2025புது டில்லி, போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிவு
05 May 2025ஓசூர், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக்கிழங்கு விலை சரியதொடங்கியுள்ளது.
-
பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு
05 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கே
-
மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: மின் விளக்கு கம்பம் சாய்ந்ததில்காயமின்றி உயிர் தப்பிய ஆ.ராசா
05 May 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் கில் .?
05 May 2025புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
வடபழனியில் நகை வியாபாரியிடம் ரூ.20 கோடி வைரம் திருடப்பட்ட சம்பவத்தில் நான்கு பேர் கைது
05 May 2025சென்னை, வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை: பிரதமர் மோடிக்கு புதின் முழு ஆதரவு
05 May 2025புதுடெல்லி, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் புதிய கல்விக்கொள்கை தேவையில்லை: அமித்ஷா பேச்சுக்கு அன்பில் மகேஷ் பதில்
05 May 2025சென்னை, வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
05 May 2025கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
-
'லெவன்' இசை வெளியீடு
05 May 2025ஏ.ஆர்.
-
இந்திய அணி ஆறுதல் வெற்றி
05 May 2025இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
-
பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப்
05 May 2025லக்னோ: ஐ.பி.எல். போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
-
சீனா: படகு கவிழ்ந்து 10 பேர் பலி
05 May 2025பெய்ஜிங்: சீனாவில் தற்போது மே தின விடுமுறை காலம் என்பதால் நேற்றுமுன்தினம் யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர்.
-
அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம்: கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
05 May 2025திருப்பூர்: அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்.
-
டி-20, ஒருநாள் தரவரிசை: இந்திய அணி ஆதிக்கம்
05 May 2025மும்பை: டி20, ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா ஆதிக்கம்...
-
சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு, விவரங்களை அறிவிக்க மத்திய அரசுக்கு காங்., வலியுறுத்தல்
05 May 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பில் காலக்கெடு விவரங்களை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவீதம் வரி: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
05 May 2025வாஷிங்டன், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவித கட்டண வரியை அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப்.