முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்

திங்கட்கிழமை, 5 மே 2025      சினிமா
Tourist-Family

சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.  இதற்கிடையே, சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடக்க, இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்பும் காவல்துறை, அந்த குடும்பத்தை பிடித்து வழக்கை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதை மேடை நாடகம் போல் சொல்வதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி படம்.

சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரனுக்கு சிறப்பு வணக்கம். சசிகுமார் - சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஜெகன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சிறுவன் கமலேஷ், நடிப்பு அருமை. படத்தின் ஆரம்பத்தில் வரும் யோகி பாபு மற்றும் .எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்‌ஷ்மி என அனைவரும் நடிப்பு அருமை. ஈழத் தமிழர்களின் அவல நிலையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்தாலும், அதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் செயற்கைத்தனமாக இருப்பதால் சிரிப்புக்கு பதில் தூக்கம் தான் வருகிறது.  இளைய மகனின் குறும்புத்தனம் ஆகியவற்றை வைத்து பார்வையாளர்களை சிரிக்க வைக்க இயக்குநர் அபிஷன் ஜீவிந், இறுதியில் எதிர்பார்க்காத சுவாரஸ்யமான கிளைமாக்ஸ் மூலம் படத்தை முடித்திருப்பது மக்கள் மனதில் வெல்லும். மொத்தத்தில், இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்  பேமிலியாக ரசிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து